Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வசனகர்த்தாவாக மாறும் கபிலன்வைரமுத்து

வைரமுத்துவின் இளைய மகன் கபிலன் வைரமுத்து. எழுத்தாளராக, பாடலாசிரியராக அறியப்பட்ட இவர் மீன் படத்தின் மூலம் வசனகர்த்தாவாக வலம்வரவிருக்கிறார். இப்படத்திற்கு இசை ஜி.வி.பிரகாஷ்.

இயக்குநர் தரணியிடம் பணிபுரிந்த ஹரிபாஸ்கர் இயக்கிவரும் படம் மீன். இப்படத்திற்கான வசனத்தையும், பாடல்களையும் கபிலன்வைரமுத்து எழுதுகிறார்.

சில மாதங்களுக்குப் முன் கபிலன் எழுதிய மெய்நிகரி நாவலை படித்திருக்கிறார் ஹரிபாஸ்கர். பிடித்துப் போகவே கபிலனை அணுகியிருக்கிறார் இயக்குநர். கபிலனும் படத்திற்கான விவாதத்திற்கு சம்மதித்திருக்கிறாராம்.

உதயம் என்.ஹச்.4ல் தொடங்கி அநேகன் வரை பல்வேறு  படங்களுக்கு பாடல்கள் எழுதிவந்த கபிலன் தற்பொழுது கெளதம் கார்த்திக் நடிக்கும் இந்திரஜித், பேய்கள் ஜாக்கிரதை, களம் உள்ளிட்ட பல படங்களுக்கு பாடல்கள் எழுதிக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close