Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மாஸ் படத்தில் காட்சிகள் நீக்கம்..காரணம் என்ன?

வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் மாஸ் படம், மே 15 இல் வெளியாகும் என்று சொல்லப்பட்டிருந்தது.அந்தத் தேதியில் ஜோதிகாவின் 36 வயதினிலே யை வெளியிடலாம் என்று முடிவு செய்துவிட்டார்கள்.அதனால் மாஸ் படத்தை ஒரு வாரம் தள்ளி மே 22 இல் வெளியிடவிருப்பதாகச் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

இப்போது இன்னும் ஒருவாரம் தள்ளி மே 29 இல் படத்தை வெளியிடவிருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். வரிசையாக பேய் படங்கள் அதுவும் காமெடிப் பேய் படங்கள் வெளியாகிவரும் நிலையில் இப்போது இந்த பாணியை கையில் எடுத்துருக்கிறது வெங்கட்பிரபு & கோ. இதில் சூர்யா , ஷக்தி ,மாசிலாமணி என இரு கேரக்டர்களில் நடிக்கிறாராம். ஒரு சூர்யாவுக்கு நயன்தாரா ஜோடியாகவும், மற்றொரு சூர்யாவிற்கு ப்ரணிதாவும் நாயகிகளாக நடித்துள்ளனர். 

இந்நிலையில் தற்போது படத்திலிருந்து சில காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன. கோடைகால விடுமுறை காலம் என்பதால் படத்தை பார்க்க குழந்தைகள் அதிகம் வருவார்கள் என்பதால் படத்தில் அதிகம் பயமுறுத்தும் காட்சிகள் சற்றே நீக்கப்பட்டுள்ளன. மேலும் தற்போது இடம்பெற்றுள்ள காட்சிகளும் பயமுறுத்துவது போல் அமைந்து காமெடியாக முடியுமாம். சூர்யா பிரேம்ஜி அமரன் காட்சிகள் அதீத கமெடியாக இருக்குமாம். 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close