Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'இஞ்சி இடுப்பழகி' படத்தில் கார்த்தி, நாகர்ஜுனா!

’இரண்டாம் உலகம்’ படத்தையடுத்து ஆர்யா, அனுஷ்கா, இணைந்து நடிக்கும் படம் ‘இஞ்சி இடுப்பழகி’ படத்தின் துவக்கவிழாவில் ஆர்யா, அனுஷ்கா, ஜெயம் ரவி, மற்றும் ஜெயம் ராஜா உள்ளிட்டோர் உடனிருந்து படத்தை துவக்கி வைத்தனர்.

படத்தை பழம்பெரும் இயக்குநர் ராகவேந்திர ராவின் மகனும், தெலுங்கில் பல்வேறு வெற்றிப் படங்களை இயக்கியவருமான கே.எஸ்.பிரகாஷ் இயக்குகிறார். படத்தின் கதைப்படி ஸீரோ ஸ்ட்ரக்சர் மோகம் குறித்தும் அதைச் சார்ந்து நகரும் திரைக்கதையும் தான். இப்படத்தில் அனுஷ்கா இரண்டு ரோலில் நடிக்க இருக்கிறார். ஒரு அனுஷ்கா ஒல்லியாக, இடையழகியாவும், மற்றொரு அனுஷ்கா சற்று குண்டாகவும் என இரு வேடங்கள்.

இந்த படத்தில் ஸ்ருதி ஹாசன் ஒரு பாடலுக்கு நடனம் ஆடுகிறார் என முன்பே அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அடுத்த செய்தியாக படத்தில் நாகர்ஜுனா சிறப்பு தோற்றத்தில் வருகிறாராம். அதே சமயம் கார்த்தியிடமும் சிறப்பு தோற்றத்திற்காக பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ளது. இவர்கள் இருவரும் அதே பிவிபி நிறுவனத்தின் தமிழ் - தெலுங்கில் ஒரே நேரத்தில் உருவாகி வரும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close