Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சமூக வலைதளங்களின் பின்னணியில் ‘ஜிகினா’?

 ரவிநந்தா இயக்கத்தில் விஜய் வசந்த், சனியா தாரா நடிக்கும் படம் ‘ஜிகினா’. லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் படத்தின் தியேட்டர் உரிமையை பெற்றுள்ளது. 

'ஒரு கல்லூரியின் கதை', 'மாத்தி யோசி', 'அழகன் அழகி' போன்ற படங்களை இயக்கியவர்தான் நந்தா பெரியசாமி. இப்படத்தில் சிங்கம் புலி, மற்றும் 'கும்கி' அஸ்வின் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்கள். அறிமுக இசையமைப்பாளர் ஜோனே இப்படத்துக்கு இசையமைக்கிறார். பாடலாசிரியர் யுகபாரதி படத்தின் அனைத்துப் பாடல்களையும் எழுதுகிறார்.

ஒரு கால் டாக்ஸி டிரைவர், ஐடி துறையில் வேலை செய்யும் ஒரு பெண் இருவருக்கும் ஃபேஸ்புக் மூலம் நட்பு, பின்னர் காதல் க்ளைமாக்ஸ் என்ன என்பதே கதை என்கின்றனர் படக்குழு. மேலும் படம் சமூக வலை தளங்களின் மூலம் உண்மையில்லாத உறவுகள், மற்றும் இளைஞர்களை திசை திருப்பும் மாயைகள் என படம்பிடித்து காட்ட உள்ளதாம். ‘மின்னுவதெல்லாம் பொன்னல்ல’ என்ற பழமொழியை அடிப்படையாக வைத்தே ‘ஜிகினா’ படம் எடுக்கப்பட்டுள்ளதாம். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close