Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மாஸ் படத்திற்கு ‘யு’ சான்று!

 வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா, நயன்தாரா, பிரணிதா, பிரேம்ஜி அமரன், உள்ளிட்ட பலர் நடிப்பில் மே 29ம் தேதி வெளியாக உள்ள படம் ‘மாஸ்’. படத்திற்கு இசை யுவன் ஷங்கர் ராஜா. இந்த படம் மே 15 இல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதே தேதியில் ஜோதிகாவின் ’36 வயதினிலே’ படத்தை வெளியிடலாம் என்று முடிவு செய்து , ’மாஸ்’ படம் ஒரு வாரம் தள்ளி மே 22 இல் வெளியிடவிருப்பதாகச் அறிவிக்கப்பட்டது.

 பின் அந்த தேதியும் மாற்றப்பட்டு மே 29 இல் படத்தை வெளியிடவிருக்கிறார்கள் படக்குழு. ஐபிஎல் ஃபைனல் காரணமாகவும் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குழந்தைகளை கவரும் நோக்கத்தில் படத்தில் சில பயமுறுத்தும் காட்சிகள் நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

படத்தை பார்த்த தணிக்கை தரப்பு படத்திற்கு ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளது. பேய் படங்கள் என்றாலே யு/ஏ கொடுப்பதுதான் வழக்கம். ஆனால் ’டார்லிங்’ படத்திற்கு பிறகு ‘மாஸ்’ படத்திற்கு தற்போது யு சான்றிதழ் கிடைத்துள்ளது. 

142 நிமிடங்கள் அதாவது 2மணி நேரம் 22 நிமிடங்கள் கொண்ட இந்த படம் உலகம் முழுவதும் மே 29ம் தேதி 1500 திரைகளில் வெளியாகவிருக்கிறது. சூர்யாவைப் பொருத்தமட்டில் தெலுங்கிலும் இவரது படங்களுக்கு வரவேற்பு இருப்பதால் அங்கேயும் ’ரக்‌ஷாசுடு’ என்ற பெயரில் வெளியாக உள்ளது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close