Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மணிரத்னத்தின் அடுத்தபடநாயகன் தனுஷ்?

தனுஷ் இப்போது மாரி படத்தை முடித்துவிட்டார். அடுத்து வேலையில்லாப்பட்டதாரி படத்தின் இரண்டாம்பாகத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கிறது. இதற்கடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் ஒருபடம் நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கடுத்து அவர் நடிக்கும் படத்துக்கான பேச்சுவார்த்தைகளும் நடந்துமுடிந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது.

இந்தமுறை தனுஷ் நடிக்கவிருப்பது மணிரத்னம் இயக்கத்தில் என்று சொல்கிறார்கள். மணிரத்னம், ஓகாதல்கண்மணி படத்திற்கு அடுத்து தமிழ் மற்றும் இந்தி ஆகிய இருமொழிகளிலும் எடுக்கிற மாதிரி ஒரு கதையைத் தயார் செய்துகொண்டிருக்கிறாராம். அந்தக்கதைக்கு தனுஷ் பொருத்தமாக இருப்பார் என்றெண்ணி அவரை அணுகியிருக்கிறார்கள்.

கதைக்கருவை கேட்ட தனுஷூக்கு பிடித்துவிட்டதென்று சொல்கிறார்கள். ராஞ்சனா, ஷமிதாப் ஆகிய படங்களைத் தொடர்ந்து இந்தியில் மணிரத்னம் இயக்கத்தில் நடிப்பது என்பதும் தமிழிலும் அவருடைய இயக்கத்தில் ஒருபடம் வருவகிறதென்பதும் தனுஷூக்கு மகிழ்ச்சி என்று சொல்கிறார்கள். தனுஷ் கைவசம் இருக்கும் படங்களை முடித்துவிட்டு வருவதற்கும் மணிரத்னம் தயாராவதற்கும் சரியாக இருக்குமாம்.

இப்போதைக்கு மணிரத்னம் இயக்கத்தில் தனுஷ் நடிக்கிறார் என்பது மட்டும் முடிவாகியிருக்கிறதென்றும் மற்ற நடிகர் நடிகைகள் தொழில்நுட்பக்கலைஞர்கள் பறறி இன்னும் முடிவு செய்யப்படவில்லையென்றும் சொல்கிறார்கள். இந்தவிசயத்தை அவர்களாக அறிவிக்க இன்னும் சில வாரங்களாகும் என்றும் சொல்கிறார்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close