Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பாபி சிம்ஹா நடிக்கும் ‘மெட்ரோ’

’மசாலா படம்’, ‘உறுமீன்’,’ பாம்பு சட்டை’,’இறைவி’,’கவலை வேண்டாம்’, மற்றும் பெங்களூர் டேஸ் தமிழ் ரீமேக் என  பாபி சிம்ஹா செம பிஸி. இந்த படங்கள் மட்டுமல்லாமல் ‘மெட்ரோ ‘ என்ற படத்திலும் எந்தவித அறிவிப்புமின்றி நடித்து வருகிறார். 

’ஆள்’ படத்தை இயக்கிய ஆனந்த் கிருஷ்ணன் தயாரிப்பில் பாபி சிம்ஹா, ஸ்ரீரிஷ், சத்யா, சென்ராயன், உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் இந்த படம் முழுக்க முழுக்க தங்கத்தை மையமாக வைத்து உருவாகி வருகிறது. 

’ஆள்’ படத்தில் தீவிரவாதத்தை காட்டிய ஆனந்த் கிருஷ்ணன், இந்த படத்தில், உலகிலேயே தங்கம் அதிகம் இருக்கும் நாடு இந்தியா, எனினும் ஏழை நாடாக இருக்கிறது, காரணம் கொஞ்சம் தங்கம் தான் வெளியிலும், முக்கால்வாசி தங்கம் கருப்புத் தங்கமாகவும் கடத்தல் தங்கமாகவும் இருக்கிறது. 

இந்த தங்கம் எப்படி உருவாகிறது,எப்படி எடுக்கப்படுகிறது. இதற்கு நடுவில் எப்படியெல்லாம் சமூக விரோதிகள் கைகளில் உலாவுகிறது என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் படமே ‘மெட்ரோ’.இதில் பாபி சிம்ஹாவுக்கு முக்கிய வேடமாம்.  

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close