Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சூர்யாவின் மாசு படத்தால் உருவான சிக்கல்!

 வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா, நயன்தாரா பிரேம்ஜி அமரன் நடிப்பில் நேற்று வெளியான படம் ’மாசு’. இந்த படத்தில் விஜய் அஜித்தின் படங்கள் சம்மந்தப்பட்ட பெயர்கள், மற்றும் வசனங்கள் என படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன. 

சூர்யாவின் பெயராக ஜெகதீஷ் என ஓரிட்டத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும். மேலும் பிரேம்ஜி அமரனின் பெயர் விநாயக் மகாதேவ் என மங்காத்த அஜித்தின் கேரக்டர் பெயர் இருக்கும்.  படத்தில் ஒரு காட்சியில் சூர்யா கத்தியை எடுக்கும் போது ’கத்தி’ படத்தின் தீம் மியூசிக் இணைக்கப்பட்டுள்ளது. அதேபோல் ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படத்தின் மேகமாய் வந்து போகிறேன், பாடலும் படத்தில் வருகிறது. 

இது தவிர்த்து ’வீரம்’ படத்தின் பின்னணி இசையை ராஜேந்திரனுக்கும், ’கத்தி’ பின்னணியை சூர்யாவிற்கும் இணைக்கப்பட இது குறித்த மீம்ஸ்களை இணையத்தில் அஜித் , விஜய் ரசிகர்கள் வெளியிட்டு வருகின்றனர். தளபதி பெரிசா, தல பெரிசா என கேள்விகளுடன் மீம்ஸ்கள் பரவி வருகின்றன. 

அதில் சில அஜித் ரசிர்கள், காமெடியனுக்கு எங்கள் தல’யின் இசையா எனவும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். வெங்கட் பிரபு என்றாலே தனது படங்களில் மாஸ் ஹீரோக்களின் இசையையோ வசனங்களையோ பயன்படுத்துவது வழக்கம். சரியான சான்று ‘எவ்வளவோ பண்ணிட்டோம் இத பண்ணமாட்டமா’, ‘என்னக் கொடுமை சார் இது’ போன்ற வசனங்கள் இவைகளில் மிகப் பிரபலமானவை. இந்த படத்திலும் அதையே கையாள பிரச்னை வேறு விதமாக திசை திரும்பியுள்ளது. 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close