Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயனோடு போட்டி போடுகிறார் கமல்?

 ஜூலை 17 அன்று சிவகார்த்திகேயன் நடித்த ரஜினிமுருகன் படம் வெளியாகும் என்று முதலில் சொல்லியிருந்தார்கள். அதன்பின்னர் அதே தேதியில் தனுஷ் நடித்திருக்கும் மாரி படம் வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இவ்விரு படங்கள் மட்டுமின்றி கமல் நடித்திருக்கும் 'த்ரிஷ்யம்' படத்தின் மொழிமாற்றான பாபநாசம் படமும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இப்படி ஒரேதேதியில் மூன்று பெரியநடிகர்களின் படங்கள் வெளியாகும் என்று சொல்லப்பட்டிருப்பதால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. அந்தத்தேதியில் படம் வெளியாகும் என்று முதலில் சொன்னது ரஜினிமுருகன், அடுத்து மாரி. இந்தத் தேதியை மாரி படக்குழுவினர் தேர்ந்தெடுக்கக் காரணம் இருக்கிறதாம். சென்ற ஆண்டு ஜூலை 18 ஆம் தேதிதான் வேலையில்லாப்பட்டதாரி படம் வெளியானதாம். அந்தப்படம் வெற்றி. அதனால் அதேதேதியில் படம் வெளியாகட்டும் என்று தனுஷ் விரும்பியதாகச் சொல்லப்படுகிறது. அதனால் தயாரிப்புநிறுவனம் அந்தத்தேதியில் படத்தை வெளியிட முடிவுசெய்ததாகச் சொல்லப்படுகிறது.

அதற்கடுத்து கமலின் பாபநாசம் படத்தையும் அதேதேதியில் வெளியிட முடிவு செய்தது எப்படி என்றால், ரம்ஜான் விடுமுறை என்பதுதான் காரணம் என்று சொல்லப்படுகிறது. இப்படி ஒரே நாளில் கமல், தனுஷ், சிவகார்த்திகேயன் ஆகிய மூன்று பெரியநடிகர்களின் படங்களும் வெளியாகும் என்று சொல்லப்பட்டிருப்பதால் திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் வரும் என்று சொல்லப்படுகிறது.

இம்மூன்று நடிகர்களுக்குமிடையே போட்டி நடக்கும் சூழலும் உருவாகியிருக்கிறது. ஏற்கெனவே தனுஷூக்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையே பனிப்போர் நடைபெற்றுக்கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிற இந்த நேரத்தில் அவர்கள் இருவருடைய படங்களும் ஒரேநாளில் வெளியாவதே பரபரப்பு எனும்போது அவர்களோடு கமல் படமும் சேரும்போது இன்னும் பரபரப்பாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. தயாரிப்பாளர்கள்சங்கம் அண்மையில் பெரியபட்ஜெட் படங்கள் வெளியாவதற்கென்று வருடத்தில் குறிப்பிட்ட சில தேதிகளைச் சொல்லியிருந்தது. அந்தத் தேதிகளில் ஜூலை 17 இல்லை. அப்படியிருக்கும் போது ஒன்றுக்கு மூன்றுபடங்கள் அதே தேதியில் அறிவிக்கப்பட்டது சரியா? என்ற கேள்விகளும் எழுகின்றனவாம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close