Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நாசருக்குக் கொலைமிரட்டல்.

நடிகர்சங்கத் தேர்தல் ஜூலை 15 ஆம் தேதி நடைபெறவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் இப்போது தலைவராக இருக்கும் சரத்குமார், மீண்டும் தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறார்.

இந்தமுறை சரத்குமார் மற்றம் அவருடைய குழுவினரை எதிர்த்துப் போட்டியிட விஷால் உள்ளிட்ட இளம்நடிகர்கள் கூட்டம் ஒருங்கிணைந்து செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. அந்த அணியின் சார்பில் தலைவர் பதவிக்கு நடிகர் நாசர் போட்டியிடலாம் என்று சொல்லப்படுகிறது. அது தொடர்பாக இன்னும் அறிவிப்பு எதுவும் வரவில்லை என்றாலும் அவருக்கு மிரட்டல்கள் வரத்தொடங்கியிருக்கின்றனவாம்.

தொலைபேசி வழியாக, தாறுமாறாகத் திட்டுவது, கொலைமிரட்டல் விடுவது போன்றவை நடக்கத் தொடங்கிவிட்டனவாம். நடிகர்சங்கத் தேர்தலில் இவர்தான் தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறார் என்று செய்திகள் வந்தபிறகுதான் இப்படிப்பட்ட மிரட்டல்கள் வருகின்றனவாம். இதுதொடர்பாக நாசர், புகார் எதுவும், எங்கேயும் தரவில்லை என்றாலும் தமக்கு நெருக்கமானவர்களிடம் இதுபற்றி வருத்தப்பட்டுச் சொல்லிக்கொண்டிருந்திருக்கிறார். அவரிடம், இதுபற்றிக் கேட்டபோது, அப்படி மிரட்டல்கள் வந்தன ஆனால் அவற்றை நான் சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை என்று சொல்கிறார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close