Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

லதாரஜினிகாந்த் அமைதி காப்பது எதனால்?

கோச்சடையான் படத்தைத் தொடர்ந்து ரஜினி நடிப்பில் லிங்கா வந்து, போய்விட்டது, அதற்கடுத்து அவர் நடிக்கும் படங்கள் பற்றிய செய்திகள் இப்போது பரபரப்பாகப் பேசப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இந்தநேரத்தில் மீண்டும் கோச்சடையான் படம் தொடர்பான சர்ச்சை செய்திகளில் முக்கியஇடத்தைப் பிடித்திருக்கிறது.

கோச்சடையான் தொடர்பான வழக்கொன்றில் பெங்களூரு நீதிமன்றத்தில் லதாரஜினிகாந்த் சமர்ப்பித்த ஆவணம் போலியானது என்று சொல்லி அவருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. இதைத் தொடர்ந்து லதாரஜினிகாந்தை விசாரிப்பதற்காக பெங்களூரு காவல்துறையினர் சென்னை வருவதாகவும் செய்திகள் உள்ளன. மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம் பற்றி லதாரஜினிகாந்தின் கருத்தை அறிய பத்திரிகையாளர்கள் முயல்வது இயல்பு.

நேற்றிலிருந்து இதுதொடர்பாகப் பலரும் லதாரனிகாந்த் தரப்பின் கருத்தறியப் பலவேறு வகைகளில் தொடர்புகொள்ள முயல்தாகத் தெரிகிறது. ஆனால் இது சம்பந்தமாக அவர் எதுவும் பேசமாட்டார் என்று சொல்லிவிட்டார்கள். அதற்குக் காரணம், இது தனிப்பட்ட இரண்டுபேருக்கான சிக்கல் அல்ல, இது நீதிமன்றம் சம்பந்தப்பட்டது, அதனால் இதுபற்றித் தனிப்பட்ட முறையில் கருத்துச் சொல்லஇயலாது என்பதால் அவர் ஊடகங்களைத் தவிர்ப்பதாகச் சொல்லப்படுகிறது.

அதுமட்டுமின்றி அவர் தடை வாங்கியதே ஊடகங்கள் செய்தி வெளியிடக்கூடாது என்றுதான், அதிலேயே சிக்கல் எனும்போது அவர் எப்படி ஊடகங்களிடம் பேசுவார்? என்கிற கேள்வியையும் எழுப்புகிறார்கள். எது எப்படியோ ரஜினியின் மனநிம்மதியைக் கெடுக்கும் நிகழ்வுகள் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கின்றன என்பது மட்டும் உண்மை.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close