Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கான் ஃபர்ஸ்ட் லுக்! ட்ரென்டில் சிம்பு!

செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு நடித்துவரும் படம் கான். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் ஜூன் 17ம் தேதி வெளியாகிறது என்று அறிவிக்கப்பட்டதை அடுத்து சிம்பு ரசிகர்கள் அதனை ட்விட்டரில் ட்ரென்ட் செய்துள்ளனர்.

இரண்டாம் உலகம் படத்திற்குப் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பின் சிம்புவை வைத்து செல்வராகவன் இயக்கிவரும் படம் கான். இப்படத்தில் கேத்ரீன் தெரஸா , ப்ரியா ஆனந்த், டாப்ஸி என்று மூன்று கதாநாயகிகள் நடிக்கின்றனர். சிம்பு இப்படத்தில் முருக பக்தராக நடிக்கிறார். டாப்ஸி காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார்.

செல்வராகவன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “ சிம்பு நடித்து வெளியாகவிருக்கும் கான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் புதன்கிழமை மாலை 5 மணிக்கு வெளியிடப்படும். உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்” என்று ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து சிம்புவும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கான் படம் பற்றியான செய்தியை அறிவிக்க உடனே சிம்பு ரசிகர்கள் இதை ட்விட்டரில் ட்ரென்ட் ஆக்கினர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். கான் என்றால் காடு என்று பொருள். முக்கிய சில காட்சிகள் காடுகளில் படமாக்க திட்டமிட்டுவருகின்றனர். படுவேகமாக படப்பிடிப்பு நடந்துவருவதால் விரைவில் திரையில் கான்னை எதிர்பார்க்கலாம்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close