Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சினேகா வளைகாப்பு எளிமையாக நடந்தது பற்றி பிரசன்னா விளக்கம்.

 சினேகா அம்மாவாகப் போகிறார். நெருங்கிய உறவினர்கள் மற்றும் சினிமா நண்பர்களுடன் நேற்று சினேகாவின் வளைகாப்பு நிகழ்ச்சி சிறப்பாக முடிந்தது. சீக்கிரத்தில் வீட்டில் குட்டி சினேகா தவழப்போவதால் மகிழ்ச்சியில் இருக்கிறாராம் பிரசன்னா.

அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் இருவரும் இணைந்து நடிக்கும் போதே காதலில் விழுந்தனர் சினேகா - பிரசன்னா. மலர்ந்த காதல் திருமணம் வரையும் சென்றது. பெற்றோர்களின் சம்மதத்துடன் மே 12ம் தேதி 2012ல் திருமணமும் செய்துகொண்டனர்.

நேற்று சினேகாவிற்கு வளைகாப்பும் சிறப்பாக நடந்துமுடிந்தது. இப்போது சினேகா 7 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். வரும் ஆகஸ்ட் மாதம் குழந்தை பிறக்கும் என்று டாக்டர் கூறியிருக்கிறாராம். நிகழ்ச்சிக்கு சிபிராஜ், மீனா, நரேன், பாடகர் கிருஷ் உள்ளிட்ட பலர் வந்து வாழ்த்துகள் தெரிவித்தனர்.

நிகழ்ச்சி முடிந்ததைத் தொடர்ந்து பிரசன்னா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “ குறுகிய நேரத்தில் திட்டமிட்டு இந்த நிகழ்ச்சியை நடத்தி முடித்துவிட்டோம். நிறைய நண்பர்களை வளைகாப்பு நிகழ்ச்சிக்கு அழைக்க முடியாமல் போய்விட்டது. ஆனாலும் எனக்கு தெரியும் சினேகாவுக்கும் குட்டி பாப்பாவுக்கும் உங்கள் ஆசீர்வாதம் என்றும் இருக்கும்” என்று ட்விட் செய்துள்ளார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close