Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விஜய்க்குப் பிறந்தநாள் வாழ்த்துச் சொன்ன அஜித் ரசிகர்கள். ஆரோக்கிய அணுகுமுறை ஆரம்பம்.

நாளைய தீர்ப்பு, செந்தூரப்பாண்டி, ரசிகன், தேவா, ராஜாவின் பார்வையிலே என்று படிப்படியாக தன்னுடைய படங்களின் மூலம் ரசிகர்களை தன் பக்கம் இழுத்தவர் விஜய். கடைசியாக தலைவா, ஜில்லா, கத்தி என்று இன்று வரையிலும் அவரின் படங்களை ரசிக பட்டாளங்களே தூக்கி கொண்டாடி வருகின்றன. விஜய்யின் 41 வது பிறந்த தினம் இன்று.

விஜய்யை பாராட்டி பல சினிமா பிரபலங்கள் வாழ்த்துகள் தெரிவித்துவருகின்றன. சமந்தா, நந்திதா, நயன்தாரா, ஏ.ஆர்.முருகதாஸ், பாலாஜிமோகன், விக்ரம் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் தங்களுடைய வாழ்த்துகளை ட்விட்டரில் தெரிவித்தனர். மற்றும் பல ரசிகர்களும் ட்விட்டரில் விஜய்க்கு வாழ்த்துகள் தெரிவித்துவருகின்றனர். குறிப்பாக பல அஜித் ரசிகர்களும் விஜய்க்கு வாழ்த்துகளை தெரிவித்துவருவது ஆரோக்கியமான செயல்.  இவர்கள் அனைவருக்கும் நன்றி கூறும் விதமாக அவர்களின் ட்விட்களை ரிட்விட் செய்கிறார் விஜய்.

இன்று காலையிலிருந்து #HBDDearVIJAY என்ற டேக் ட்விட்டரில் ட்ரெண்டில் இருந்துவருகிறது. மேலும் கத்தி படத்திற்கு வீடியோ கேம் ஆப்ளிகேஷன் உருவாக்கிய டீம் விஜயின் பிறந்த நாள் சிறப்பாக க்ளீன் இந்தியா திட்டத்தை மையப்படுத்தி விஜயை வைத்து புது வீடியோ கேம் ஆப்ஸ்ஸை வெளிவிட்டிருக்கிறது. இந்த ஆப்ஸ் செயல்பாட்டிற்கு அனுமதி கேட்க விஜய் உடனே ஓகே சொல்லியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று இரவு நெல்லை திரையரங்கில் விஜய் பிறந்தநாள் கொண்டாட்டமாக சிறப்பு இரவுக் காட்சியில் துப்பாக்கி படமும் திரையிட்டுள்ளனர். தொடர்ந்து இன்று அனைத்து ரசிகர்களும் இரத்த தானம் உள்ளிட்ட பல உதவிகளை செய்துவருகின்றனர்.

அதுமட்டுமில்லாமல் விஜய் நடித்துவரும் புலி டீஸரும் விஜய் பிறந்தநாள் அன்று வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் புலி படமும் அதைத் தொடர்ந்து அட்லியுடன் விஜய் 59வது படமும் ரசிகர்களுக்கு பிறந்தநாள் விருந்து படைக்க வெளியாக தயாராகிவருகிறது.

விஜய்க்கு வாழ்த்துகள் சொன்ன சில ட்விட்டுகள்:

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close