Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அதிருப்தியில் இருக்கிறாரா புலி இயக்குநர்?

விஜய் பிறந்த நாள் ஸ்பெஷலாக புலி படத்தின் டீஸரும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் ரிலீஸாகி பெரும் வரவேற்பை பெற்றது. வெளியாகி இரண்டே நாட்களில் 20லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் புலி டீஸரை பார்த்துள்ளனர்.  தனுஷ், சூர்யா, விஷால் என்று பல நட்சத்திரங்களும் புலி டீஸரை வரவேற்றுள்ளனர்.

ஆனாலும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாவதற்கு முன்னரே புலி பட புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது. அதுமட்டுமில்லாமல் விஜய் பிறந்த நாள் அன்று இரவு 12 மணிக்கு புலி டீஸரை வெளியிட வேண்டும் என்று புலி படக்குழு திட்டமிட்டிருந்தது. அதற்கு முன்னரே  டீஸரை இணையத்தில் லீக் செய்ததால் பெரும் அதிருப்தியில் இருக்கிறாராம் சிம்பு தேவன்.

தற்பொழுது படத்தின் கிராஃபிக்ஸ் வேலைகள் நடந்துவருகிறதாம். ஆனால் கிராஃபிக்ஸ் வேலைகளில் சிம்புதேவனுக்கு முழு திருப்தி இல்லை என்று சொல்லப்படுகிறது. இந்த காட்சிகள் ரசிகர்களை முழு உணர்வுடன் ரசிக்க வைக்காது. அதனால் முதலிலிருந்து கிராஃபிக்ஸ் வேலையை தொடங்க திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

மீண்டும் முதலிலிருந்தா? அப்படியானால் படத்தின் ரிலீஸ் தேதியும் தள்ளிப்போகுமோ என்று அச்சத்தில் இருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள்.


 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close