Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜி.வி.பிரகாஷ் இசையில் ஏ.ஆர்.ரஹ்மான் பாடுவாரா?

புலி படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக அட்லியின் படத்தில் நடிக்கவிருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தில் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானை பாடவைக்க முயற்சிகள் நடந்துவருகிறது.

விஜய் போலீஸ் அதிகாரியாக நடிக்கவிருக்கும் இப்படத்தில், சமந்தா, எமிஜாக்ஸன், ராதிகா உள்ளிட்ட பலர் நடிக்கவிருக்கிறார்கள். படத்திற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் ஜூன் 26ல் சென்னை திரும்பும் விஜய், ஜூலை 1ம் தேதி படப்பிடிப்பில் கலந்துகொள்ளவிருப்பதாக சொல்லப்படுகிறது.

ஜி.வி.பிரகாஷின் இசைவில் வெளியாகவிருக்கும் 50வது படம் என்பதால் பாடல் மிக வித்தியாசமாக இருக்கும் என்று எதிர்பாக்கப்படுகிறது. விஜய் நடனத்திற்காக உலக லோக்கல் பாடலை இசைக்க விருப்பதாக முன்னரே ட்விட்டரில் ஜி.வி.பிரகாஷ் தெரிவித்திருந்தார். அதன்படி தீவிரமாக செயல்பட்டுவருகிறாராம்.

தன்னுடைய 50வது படத்தில் ஏ.ஆர்.ரஹ்மானை பாடவைத்தால் நன்றாக இருக்கும் என்ற ஆசையில் இருக்கிறாராம் ஜி.வி. அதனால் ரஹ்மானை பாடவைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்படுகிறது. சம்மதித்தால் விஜய் படத்தில் ஜி.வி.இசையில் ஏ.ஆர்.ரஹ்மானின் குரலில் ஒரு பாடல் தயாராகிவிடும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close