Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இயக்குநர் மிஷ்கின் பெயரில் மோசடி!

'ஒருத்தனை ஏமாத்தணும்னா அவன்கிட்ட கருணையை எதிர்ப்பார்க்க கூடாது, அவனோட ஆசையை தூண்டனும்' என்று ஒரு திரைப்படத்தில் வசனம் வருகிறது.

அதே நேரத்தில், சினிமாவில் நடிக்க ஒரு வாய்ப்பு கிடைக்காதா? என ஏங்கும் பலரும், பல்வேறு வகைகளில் ஏமாந்து கொண்டிருப்பது ஒருபக்கம் என்றால், அதே ஆசையை வைத்து மக்களை ஏமாற்ற ஒரு குரூப் அலைந்து கொண்டிருக்கிறது.

அப்படி சமீபத்தில் நடந்த ஒரு சாம்பிள் சம்பவம் இங்கே...

பிரபல இயக்குநர் மிஷ்கின், தன் திரைப்படத்திற்கு நடிகர்களை தேர்வு செய்வதற்காக ஆடிஷன் நடத்த இருப்பதாகவும், அதனால் விருப்பமுள்ளவர்கள் குறிப்பிட்ட தேதியன்று குறிப்பிட்ட இடத்திற்கு வருமாறும் 'ஆதி' என்பவரது பெயரையும், அவரது செல்போன் எண்ணையும் குறிப்பிட்டு வாட்ஸ்அப் செய்தியொன்று பல வாட்ஸ் அப் குரூப்புகளிலும் பரவ, அதை நம்பிய 300க்கும் அதிகமான மக்கள் குறிப்பிட்ட இடத்தில் குவிந்திருக்கின்றனர்.

ஆனால், மிஷ்கினுக்கு தொடர்புடைய ஆட்கள் யாரும் வராமல், வேறு யாரோ அந்த மக்களை அணுகியிருக்கிறார்கள். ஆடிஷனுக்கு உள்ளே போக வேண்டுமென்றால் 300 முதல் 500 வரை நுழைவு கட்டணம் தர வேண்டும் என்று சொல்ல, கடைசியில் விரக்தியில் கலைந்திருக்கிறார்கள் மக்கள். (அன்றைய தேதியில் குறிப்பிட்ட அந்த அரங்கம் புக்கிங் ஆகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது)

இந்த சம்பவத்துக்குப் பிறகு அந்த வாட்ஸ்அப் செய்தியில் குறிப்பிட்டிருந்த எண்ணுக்கு அடுத்தடுத்து பலரும் போன் செய்ய, 'ஃபேக் நியூஸ்' என்று சொல்லியிருக்கிறார்கள். அதுவே பெண்கள் போன் செய்தால் 'சில தவிர்க்க முடியாத காரணத்தால் இன்னைக்கு நடக்க வேண்டியது நடக்கலை... ஆனா கண்டிப்பா உங்க போட்டோவை வாட்ஸ்அப்பில் அனுப்புங்க. ஒரு மாசத்துக்குள்ள உங்களை கூப்பிடுறோம்' என்றும் சொல்லியிருக்கிறார்கள்.

இந்த தகவல் அறிந்த நாம், மிஷ்கினின் உதவி இயக்குநரும், தற்போது மிஷ்கினின் தயாரிப்பில் சொந்தமாக திரைப்படம் இயக்குபவருமான,  ஆதித்யாவிடம் பேசினோம்.

''எப்பவுமே புதுசா ஒரு படத்துக்கு நடிக்க ஆட்கள் தேவைன்னா அதை நிறைய பேரிடம் பகிர்ந்துப்போம். அப்படி யாராவது வாய்ப்பு தேடி வந்தா அவங்களை நேரடியாக மிஷ்கின் சாரோட ஆபிஸுக்கு வரவழைச்சு அவங்கள போட்டோ எடுத்துட்டு அனுப்புவோம். பிடிச்சிருந்தா ஓகே பண்ணுவோம். இதுதான் நடைமுறை.

இப்படி நடக்குறத அப்படியே மாத்தி, யாரோ வாட்ஸ்அப்ல தேவையில்லாம என் பெயரை பயன்படுத்தி, தப்பா பரப்பி இருக்காங்க. அதுல குறிப்பிட்டு இருக்குற செல்போன் எண்ணும் என்னோடது இல்ல. நிறைய பேர் எனக்கு போன் பண்ணி இந்த தகவலை சொன்னப்ப, எனக்கே இது அதிர்ச்சியாதான் இருந்துச்சு. அதனால தயவு செய்து யாரும் இதை நம்பாதீங்க'' என்றார் அழுத்தமாய்.

இதேபோலவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு இயக்குநர், நடிகர் சசிக்குமாரின் பெயரில் போலியான ஃபேஸ்புக் ஐடியை வைத்துக் கொண்டு, இதேபோல ஆடிஷனுக்கு அழைத்திருக்கிறது ஒரு கும்பல். சசிக்குமார் தகவல் தெரிந்து புகார் அளிக்க, அந்த போலி ஐடி, பிளாக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய். தீர விசாரிப்பதே மெய்!

-பொன்.விமலா,

அ.பார்த்திபன் (மாணவப் பத்திரிகையாளர்)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Related Tags

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close