Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விஷாலுக்கு ஜோடி யார் சமந்தாவா? தமன்னாவா?... சண்டக்கோழி 2 அப்டேட்!

 லிங்குசாமி இயக்கத்தில் 2015ம் ஆண்டு வெளியாகி ஹிட்டடித்த படம் ‘சண்டக்கோழி’. விஷால் , மீரா ஜாஸ்மின், ராஜ் கிரண், நடிப்பில் வெளியான இப்படத்தின் மூலம் தான் விஷால் ஆக்‌ஷன் ஹீரோவாகவும் அடுத்த கட்டத்திற்கு சென்றார். 

தற்போது இப்படத்தின் பார்ட் 2 க்கான ப்ரீ புரடக்‌ஷனில் லிங்குசாமி இருக்கிறார். மேலும் படத்தின் கதையமைப்பில் இருக்கும் லிங்குசாமி, விஷால் டீம் ஹீரோயினாக நடிக்க சமந்தா மற்றும் தமன்னாவிடம் பேசியதாக தகவல்கள் கசிந்தன.

தற்போது இதுகுறித்து விஷால் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளார். ‘தமன்னாவிடமோ அல்லது சமந்தாவிடமோ இந்த படத்திற்காக இதுவரை பேசவில்லை. தற்போது படம் இறுதிகட்ட கதையமைப்பில் இருக்கிறது என ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் விஷால். 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close