Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

குழந்தைகளை டார்கெட் செய்யும் ‘புலி’!

 சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஹன்சிகா, ஸ்ருதி ஹாசன் , ஸ்ரீதேவி, சுதீப், தம்பி ராமையா நடிக்கும் படம் ‘புலி’ படத்திற்கு இசை தேவிஸ்ரீபிரசாத். படத்தின் டீஸர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் விஜய்யின் பிறந்தநாள் சிறப்பாக ஒரு நாள் முன்பு வெளியானது. 

இதுவரை படத்தின் டீஸரை 40லட்சம் பார்வையாளர்கள் கண்டுகளித்துள்ளனர். மேலும் ஃபர்ஸ்ட் லுக் இதுவரை வெலீயான இந்திய படங்களிலேயே அதிகம் டவுண்லோடு செய்யப்பட்ட போஸ்டராக சாதனை படைத்துள்ளது.

படத்தின் ஒவ்வொரு காட்சிகளும் இதுவரை இல்லாத அளவிற்கு வித்யாசமாக அமைத்துள்ளனராம் படக்குழு. மேலும் விஜய் படங்களிலேயே இது மிக வித்யாசமாக உருவாக்கப்படுகிறதாம். ஒவ்வொரு ஃப்ரேமும் வண்ணமயமாக, ஸ்பெஷல் எஃபெக்ட்கள் நிறைந்து காணப்படுமாம். மேலும் இந்த படம் குழந்தைகளை கவரும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது என படத்திற்கு நெருங்கிய வட்டங்கள் தெரிவித்துள்ளனர். 

ஸ்பெஷல் எஃபெக்ட்கள், வசனங்கள், விஜய்யின் சண்டை காட்சிகள், நடனம், பாடல்கள் என அனைத்தும் குழந்தைகளை கவரும் நோக்கத்தில் அமைக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளனர். முக்கியமாக விஜய் ரசிர்களுக்கு விருந்தாக பல காட்சிகள் படத்தில் இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளனர். இந்த படத்திற்காக விஜய் பிரத்யேகமாக் வாள் சண்டை பயிற்சி எடுத்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close