Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஹீரோக்களைத் தொடர்ந்து பேய்படங்களை குறி வைக்கும் ஹீரோயின்கள்!

 ஹீரோக்கள் மட்டுமல்ல ஹீரோயின்களும் கூட சமீபகாலமாக பேய் படங்களில் ஆர்வம் காட்டத் துவங்கிவிட்டனர். அதிலும் முன்னணி நயகிகளான நயன்தாரா, ஹன்சிகா, த்ரிஷா போன்றோர் ஆர்வம் காட்டி வருவதுதான் இதில் சிறப்பு. 

பாலிவுட்டில் பிபாஷா பாசு, கங்கனா ரணாவத்,சன்னி லியோன் என பேய் மற்றும் அமானுஷ்ய படங்கள் என்றாலே சில நாயகிகள் இருப்பார்கள். ஆனால் தமிழில் அந்த நிலை தற்போது மாற ஆரம்பித்துவிட்டது. சந்திரமுகி’ படம் மூலம் ஜோதிகா பேய் பிடித்த பெண்ணாக ஹிட்டடித்தது குறிப்பிடத்தக்கது.

அந்த வரிசையில், ‘முனி’ வேதிகா, கஞ்சனா ராய் லட்சுமி, ’காஞ்சனா2’  டாப்சி, நித்யா மேனன், அரண்மனை ஹன்சிகா, ஆண்ட்ரியா, ராய் லட்சுமி,  ‘மாயா’ நயன்தாரா என இந்த லிஸ்டில் தற்போது த்ரிஷாவும் இணைந்துள்ளார். 

தமிழில் ’அரண்மனை 2’ படத்தில் ஹன்சிகா த்ரிஷா நடிப்பது நாம் அறிந்ததே. இப்போது நாயகி’ என்னும் ஹீரோயின் முக்கியத்துவம் வாய்ந்த பேய் படத்தில் த்ரிஷா நடித்து வருகிறார். கோவர்தன் இயக்கத்தில் தெலுங்கில் உருவாகிவரும் இப்படத்தில் த்ரிஷா 20 வயது பெண்ணாகவும் கொஞ்சம் வயது முதிர்ந்த பெண்ணாகவும் என இரு கெட்டப்களில் வர இருக்கிறார். 

இருபது வயது கெட்டப்பிற்காக உடல் எடை குறைத்து சின்ன பெண்ணாகவும், இந்த கேரக்டருக்கான காட்சிகள் முடிந்து பின்னர் வயது அதிகமாக ,கொஞ்சம் எடை கூடிய பெண்ணாக என இரண்டு பாத்திரங்களில் நடிக்க உள்ளார். படப்பிடிப்புகள் இம்மாதம் துவங்கப்பட உள்ளது. 

பேய் படங்களில் ஆர்வம் காட்டும் ஹீரோக்களை விட ஹீரோயின்களுக்குத்தான் கொஞ்சம் பவர் அதிகம். கண்டிப்பாக பேய் பிடித்து ஆட்டும் கேரக்டரில் ஹீரோயின் தான் வருவார். அதே போல் ஹீரோயின் முக்கியத்துவம் வாய்ந்த படங்கள் என்பதால் கொஞ்சம் பிரபலமாகாத நாயகர்கள்தான் ஹீரோக்களாக நடிப்பார்கள். எனவே விளம்பர போஸ்டர் துவங்கி, டிரெய்லர் டீஸர் என ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் அதிகம் கொடுக்கப்படும் என்பதே இதற்கு முதல் காரணம். 

 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close