Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எய்ட்ஸ் விழிப்புணர்வு படமெடுக்க இருக்கிறார் பிரியதர்ஷன்

 இந்தி. தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் படமெடுத்தவரும் ‘காஞ்சிவரம்’ படத்திற்காக தேசிய விருது பெற்றவருமான பிரியதர்ஷன் நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் ஒரு படம் எடுக்க இருக்கிறார். 

இந்த படத்தின் கதை எய்ட்ஸ் விழிப்புணர்வுடன் கூடியதாக இருக்கும் எனவும் , இந்த கதையை சில வருடங்களுக்கு முன்பு அமீர்கானிடம் கூறியதாகவும் அதற்கு அவர் கதை பிடித்திருக்கிறது முழுமையாக ஸ்க்ரிப்டை முடித்துவிட்டு சொல்லுங்கள் என கூறியதாக பிரிதர்ஷன் கூறியுள்ளார். 

தற்போது இந்தக் கதையை தமிழிலேயே எடுக்க திட்டமிட்டுள்ளார். பிரகாஷ் ராஜ், ஸ்ரேயா ரெட்டி முதன்மை பாத்திரங்களிலும், 14 புது நடிகர்கள் துணை நடிகர்கள் பாத்திரத்திலும் நடிக்க இருக்கிறார்கள் என மேலும் பிரிதர்ஷன் தெரிவித்துள்ளார். 

சந்தோஷ் சிவண் ஒளிப்பதிவில் , சாபு சிரில் கலை இயக்குநராகவும் பணியாற்ற இருக்கிறார்கள். காஞ்சிவரம் படத்தில் பட்டுத் தறி நெய்யும் தொழிலாளிகளின் வாழ்வை சித்தரித்து பார்வையாளர்களை கவர்ந்தவர் இந்த படத்தில் எய்ட்ஸை மையமாக எடுத்துள்ளார். கண்டிப்பாக சமுதாய நோக்கத்துடன் உருவாக உள்ள படம் என்பது படம் ஆரம்பிக்கும் முன்பே தெரிகிறது. 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close