Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கார்த்திக் சுப்புராஜ் மீது மானநட்டவழக்குப் போடும் ஜிகர்தண்டா தயாரிப்பாளர்

  ஜிகர்தண்டா படச்சிக்கல் இன்னும் முடிவுக்கு வரவில்லை. அந்தப்படத்தின் இந்திஉரிமையை எனக்குத் தெரியாமல் தயாரிப்பாளர் விற்கிறார் என்றும் அதற்குத் தடைவிதிக்கவேண்டும் என்றும் இயக்குநர் கார்த்திக்சுப்புராஜ் வழக்குத் தொடர்ந்திருக்கிறார்.

இந்தத் தடை உத்தரவை எதிர்த்து தயாரிப்பாளர்கள் தரப்பில் எதிர்மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்தத்தடை உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் நீக்கிவிட்டதாகவும் அதைத் தொடர்ந்து இயக்குநர் கார்த்திக்சுப்புராஜ் மீது ஐந்துகோடி ரூபாய் கேட்டு மானநட்டவழக்குத் தொடர இருப்பதாகவும் தயாரிப்பாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இது தொடர்பாகப் பத்திரிகையாளர்களைச் சந்தித்த பைவ்ஸ்டார் நிறுவனத்தைச் சேர்ந்த கதிரேசன், ஏற்கெனவே படப்பிடிப்பின்போது கார்த்திக்சுப்புராஜ் செய்த தாமதம் காரணமாக சுமார் ஒன்றரைகோடி நட்டம் எற்பட்டுவிட்டது.

அதைத் தொடர்ந்து எங்கள் நிறுவனத்துக்கெதிராக அவர் பேசிக்கொண்டிருந்ததால் தெலுங்குஉரிமையையும் விற்கமுடியாமல் அதில் சுமார் நான்குகோடி நட்டம் ஏற்பட்டுவிட்டது. இவற்றிற்கு அவர்தான் பொறுப்பேற்க வேண்டும் என்பதால் அவர் மீது ஐந்துகோடி கேட்டு மானநட்டவழக்குத் தொடர இருக்கிறோம் என்று கூறியிருக்கிறார்.   

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close