Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வாலு பட வெளியீட்டில் சிக்கல், தனுஷ் ரசிகர்கள் உற்சாகம்

சிம்பு நடிப்பில் நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு வெளியாகவிருக்கும் படம் வாலு. இப்படத்தை ஜூலை 17ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவித்தனர்.

 சிம்பு, ஹன்சிகா, சந்தானம் உள்ளிட்ட பலர் நடிப்பில் விஜய்சந்தர் இயக்கத்தில் இரண்டு வருடங்களுக்கு மேலாக தயாராகி வரும் வாலு படத்திற்கு அடுத்தடுத்து பல பிரச்னைகள் நீடித்தவண்ணம் இருந்தன. இறுதியில் நிக் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சிம்பு சினி ஆர்ட்ஸ் வெளியீட்டில் ஜூலை 17ல் உறுதியாக வெளிவரும் என்று அறிவித்திருந்தனர்.

இதைத் தொடர்ந்து மேஜிக் ரேஸ் நிறுவனம் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தது. அதன்படி தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, பாண்டிசேரி உள்ளிட்ட பகுதிகளில் வெளியீட்டு உரிமையை 2013ல் மேஜிக் ரேஸ் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் செய்தார்கள்.

தற்பொழுது வேறு நபர் மூலம் இப்படத்தை வெளியிட முயல்கிறார்கள். எங்களைத் தவிர வேறு எந்த நிறுவனம் மூலமாகவும் வாலு படத்தை வெளியிட தடைவிதிக்க வேண்டும் என்று மேஜிக் ரேஸ் நிறுவனம், சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இதன் அடிப்படையில் வழக்கு விசாரணையில் நிக் ஆர்ட்ஸ் நிறுவனம் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கேட்டது. பின்னர் வழக்கு ஜூலை 13ம் தேதிக்கு தள்ளிவைத்தது. அப்போது தன்னையும் முன்றாவது மனு தாரராக சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று டி.ராஜேந்தர் மனு தாக்கல் செய்தார்.

 இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது. சிம்பு நடிப்பில் வெளியாகவிருக்கும் வாலு படத்திற்கு தடை விதித்து நீதிபதி தீர்ப்பளித்ததாகவும் மேலும் மூன்றாவது மனு தாரராக கோரிய டி.ராஜேந்தரின் மனுவையும் தள்ளுபடி செய்ததாகவும் செய்திகள் உள்ளன.  அதுமட்டுமில்லாமல் வாலு படத்துக்குத் தடைகோரி மேலும் 6 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அவை அனைத்தும் நாளை விசாரனைக்கு வரவிருக்கிறதாம்.

இந்தச் செய்திகள் காரணமாக வாலு படம் திட்டமிட்டபடி வெளியாவது சந்தேகம் என்று சொல்லப்படுகிறது. இதனால் தனுஷ் ரசிகர்கள் உற்சாகமாகிவிட்டனர். ஆப்பொனெண்ட்டா ஆளே இல்ல சோலோவாயிட்டோம் என்கிற தனுஷின் பாடல்வரிகளை உற்சாகமாகப் பகிர்ந்து கொள்கின்றனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close