Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அனுஷ்கா ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கும் ’பாகுபலி’!

 ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், நாசர், சத்யராஜ், அர்ச்சனா, சுதீப், உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி இந்திய அளவில் வசூலில் முதலிடம் பிடித்த படம் ‘பாகுபலி’. படத்திற்கு இசை கீரவாணி.  

படம் வெளியாகி ஓரிரு நாட்களில் பார்த்தவர்களுக்கு கிடைக்காத அனுஷ்காவின் ஸ்பெஷல் தோற்றம்  அடுத்து வரும் நாட்களில் படம் பார்த்தவர்களுக்கு கிடைத்துள்ளது. படத்தின் அடுத்த பாகத்தில் தான் அனுஷ்கா, சுதீப் உள்ளிட்டோருக்கு கணமான பாத்திரம் இருக்கிறது என ராஜமௌலி கூறியது குறிப்பிடத்தக்கது. 

எனினும் அனுஷ்கா தெலுங்கு ரசிகர்களை பொருத்தமட்டில் நல்ல நடிகை என்பதைத் தாண்டி கிளாமர் பாம் என்றே சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு அனுஷ்காவிற்கு ரசிகர்கள் அங்கேயும் ஏன் தமிழிலும் அதிகம். ஆனால் பாகுபலியில் அனுஷ்காவை வயதான தோற்றத்திலேயே அலைய விட்டுவிட்டார்கள். இதனால் அவரது ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தம் என்றே கூற வேண்டும். 

தற்போது அந்த வருத்தத்தை போக்கும்படி , படத்தின் இரண்டாம் பாகத்தின் டீஸர் படத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. அதில் அனுஷ்கா ராணி கெட்டப்பில் வருகிறார். மேலும் 2016 என எழுத்துக்களும் விழுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close