Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தனுஷூக்குப் பின் விஜய்! ஸ்ருதி ஸ்பெஷல்

துப்பாக்கி படத்தில் விஜய் பாடிய கூகுள் கூகுள் பாடல் ஹிட் அடித்ததைத் தொடர்ந்து தலைவா, ஜில்லா, கத்தி ஆகிய படங்களில் தன்னுடைய சொந்தக்குரலில் பாடிவிட்டார் விஜய். இவர் பாடிய அனைத்துப் பாடலும் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து  அவரின் அடுத்தடுத்த படங்களிலும் ஒரு பாடலாவது பாடிவிட வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறாராம்.

சிம்புதேவன் இயக்கத்தில் தற்பொழுது விஜய் நடித்துவரும் புலி படத்திலும் ஒரு பாடலைப் பாடியுள்ளார். இதில் கூடுதல் சுவாரஸ்யம் என்னவென்றால் திரையில் நடிகர் விஜயுடன் ஜோடி சேர்ந்து நடித்திருக்கும் ஸ்ருதி ஹாசனும் அவருடன் சேர்ந்து இந்தப் பாடலை பாடியுள்ளார்.

ப்ளாக் அண்ட் வைட் காலகட்டத்திற்கு பிறகு நாயகன் நாயகி இருவருமே பின்னணிப் பாடலைப் பாடி திரையில் நடித்தும் இருப்பது ஒரு மைல் கல் ஆதலால் ரசிகர்கள், பொதுமக்கள் மத்தியில் மட்டுமல்லாது திரை உலகத்தினர் மத்தியிலும் இந்நிகழ்வு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது…

முன்னரே மூனு படத்தில் கண்ணழகா பாடலுக்கு தனுஷுடன் இணைந்து பாடியிருந்தார். அதற்குப் பிறகு தான் நடிக்கும் படத்தில் ஹீரோவுடன் ஜோடியாக அடுத்ததாக ,  புலி படத்தில் பாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close