Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் அஜித்தா? உறுதியாக இல்லை என்கிறது அஜித் தரப்பு

என்னை அறிந்தால் படத்திற்குப் பிறகு சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்துவருகிறார். இவரைத் தொடர்ந்து அடுத்து யார் அஜித்தை இயக்கபோகிறார் என்பதே தற்போதைய ஹாட் டாபிக்.

வீரம் படத்திற்குப் பிறகு மீண்டும் சிவாவின் இயக்கத்தில் ஸ்ருதி ஹாசன், சூரி உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்களுடன் அஜித் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். சென்னையில் தொடங்கப்பட்ட படப்பிடிப்பு இத்தாலிக்குச் சென்று பின்னர் மீண்டும் சென்னைக்கே திரும்பியுள்ளது.  நாளை கொல்கத்தாவில் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்கும் படக்குழு செல்ல தயாராகிவருகிறது.

படப்பிடிப்புக்கு நடுவே அப்புகுட்டியை போட்டோ ஷூட் எடுத்தது, பின்னர் இத்தாலியில் ஸ்ருதியை போட்டோ ஷூட் என பிஸியாக சுற்றிவந்த அஜித் இதற்கெல்லாம் நடுவே கே.வி ஆனந்திடம் கதை கேட்டதாக கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. கே.வி.ஆனந்த் கதை சொல்ல அஜித்துக்கு பிடித்து போய் விட்டதாகவும், உடனே தேதிகள் ஒதுக்கிவிட்டதாகவும் இணையத்தில் செய்திகள் பரவதொடங்கின.

 இதுபற்றி அஜித் தரப்பிடம் கேட்டதற்கு, “ முற்றியும் தவறான செய்தி. யார் தான் இப்படிப்பட்ட தகவல்களை பரப்பிவிடுகிறார்களோ தெரியவில்லை. சிவா படத்தில் அஜித் பிஸியாகஇருக்கிறார். அடுத்து யாருடன் படம் என்று இன்னும் முடிவாகவில்லை. இவ்வாறான தவறான வதந்திகளை பரப்பவேண்டாம்” என்கிறார்கள்.

இதைப் பற்றி கே.வி.ஆனந்த் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “ வீரம் ஷூட்டிங் நடந்த  அதே நேரத்தில் ஹைதராபாத்தில்  அனேகன் பட ஷூட்டிங்கும் நடந்துகொண்டிருந்தது. அப்போது சாதாரணமாக சந்தித்துப் பேசிக்கொண்டோம். வேறு ஏதும் இல்லை” என்கிறார்.

இரண்டு தரப்பிலுமேயே அஜித் - கே.வி.ஆனந்த் கூட்டணி இல்லை என்பதை  உறுதியாக கூறிவிட்டார்கள். மேலும் இரண்டு தரப்பிலுமே யாரும் வதந்திகளை பரப்பவேண்டாம் என்றே கேட்டுக்கொள்கிறார்கள். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close