Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கேரள அரசை கண்டித்து விஷால் போராட்டம்!

கேரளாவில் தெரு நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகமாகி வருவதால், அவற்றை கட்டுப்படுத்துமாறு அங்குள்ள மக்கள் அரசை நாடியுள்ளனர். மக்களின் வேண்டுகோளையடுத்து, தெருநாய்களை ஒழிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.பழைய முறையான வண்டிகளில் நாயைப் பிடித்து ஓரிடத்தில் கொண்டு சென்று கொலை செய்யும் முறைதான். இதில் பல நாய்கள் உயிருடன் எரிக்கப்படுகின்றன. இதுகுறித்து சமூக வலைகளிலும் எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன. 

அரசின் இந்த செயலால் லட்சுமி ராய் போன்ற பல பிரபலங்களும், பிராணிகள் நலவாரியங்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கேரளா அரசின் செயலை எதிர்க்கும் வகையில் இன்று சென்னையில் வள்ளுவர் கோட்டம் அருகில் பிராணிகள் நலவாரியம் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திவருகிறார்கள்.

இந்த போராட்டத்தில் விஷாலும் கலந்து கொண்டு தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார். இதுகுறித்த புகைப்படங்களும் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார் விஷால். பீடா போன்ற அமைப்பின் மூலம் நடிகர்கள், பிரபலங்கள் என பிராணிகளைத் தத்தெடுக்கும் முறை குறித்து விளம்பரப்படுத்தி வரும் நிலையில் இந்த செயல் அனைவரையும் கொஞ்சம் வருத்தமைடயச் செய்து வருகிறது.

சில காலங்களுக்கு முன் நம் தமிழகத்திலும் இந்த முறை இருந்துவந்தது பல எதிர்ப்புகளையடுத்து இந்த தெரு நாய்களை கொலை செய்யும் பழக்கம் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் கேரளாவில் தான் அடிமாட்டு தொழிலும் பெருகிவருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close