Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியின் புதிய திட்டம்

தனுஷ் இப்போது பிரபுசாலமன் இயக்கும் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இதைத் தொடர்ந்து எதிர்நீச்சல், காக்கிச்சட்டை ஆகிய படங்களை இயக்கிய துரை செந்தில் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவிருக்கிறாராம்.

அந்தப்படத்தை முடித்தபிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் வடசென்னை படத்தில் நடிக்கவிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. பொதுவாக ஒரு படம் வெளியாகி வெற்றி பெற்ற பின்புதான் அந்தப்படத்தின் இரண்டாம்பாகத்தை எடுப்பது குறித்து யோசிப்பார்கள்.

ஆனால் தனுஷ் வெற்றிமாறன் இணையும் வடசென்னை படத்தைப் பொறுத்தவரை கதை எழுதும்போதே இரண்டுபாகங்ககளாக எடுக்கத் திட்டமிட்டு எழுதியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

தனுஷிடம் கதையைப் பற்றிச் சொன்னபோதே இந்த யோசனையையும் சேர்த்தே சொன்னாராம் வெற்றிமாறன்.

தனுஷூம் அந்தக்கதையின் மீதான நம்பிக்கை காரணமாக அப்படியே செய்ய ஒப்புக்கொண்டதாகச் சொல்லப்படுகிறது. துரைசெந்தில் இயக்கும் படத்தின் வேலைகள் தொடங்கிய பிறகு இந்தப்படம் பற்றிய அறிவிப்புகள் வரக்கூடும் என்று சொல்கிறார்கள்.     

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close