Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஹீரோவாகிறார் ஸ்ரீசாந்த்!

சூதாட்ட குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் கதாநாயகனாக நடிக்கவுள்ள படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், என மூன்று மொழிகளில் நேரடியாக உருவாக உள்ளது. இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் சானா எடிரெட்டி இயக்குகிறார்.

மிக பிரமாண்டமாக தயாரிக்கப்படும் இந்த படம் 14 இந்திய மொழிகளில் டப் செய்து வெளியிடப்படுகிறது. ஐ.பி.எல். தொடரை மையமாக வைத்து தயாரிக்கப்படும் இந்த படத்தின் சூட்டிங்கை, 6 மாதங்களில் முடித்து விட படப்பிடிப்புக் குழு திட்டமிட்டுள்ளது. இதற்கு முன் பூஜா பட்டின் பாலிவுட் படமான 'கார்பெட்'டில் வில்லன் கதாபாத்திரத்தில் ஸ்ரீசாந்த் நடித்துள்ளார்.

ஆனால் முதல் முறையாக இந்த படத்தில்தான் கதாநாயகனாக நடிக்கிறார். இது குறித்து ஸ்ரீசாந்த் கூறுகையில், ''தென்னகத்தில் இதுதான் எனது முதல் படம். தென்னிந்திய சினிமாவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக என்னை அங்கீகரிக்கும் வகையில் இந்த படம் இருக்கும்'' என்றார்.மேலும் இப்போது சினிமாவில் ஜொலிக்கும் பலரும் முன்னாள் விளையாட்டு வீரர்களே எனவும் பதிவு செய்தார். 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close