Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சமந்தாவுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுத்த தனுஷ்?

 விஐபி-2 படத்தின் படப்பிடிப்புகள் யாவும் நிறைவடைந்த நிலையில் தனுஷ் வெற்றி மாறன் கூட்டணி மீண்டும் இணைந்து ஒரு படம் கொடுக்க உள்ளன. இவர்கள் கூட்டணியில் கிடைத்த வெற்றி நாமறிந்ததே. ‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’ என தேசிய விருதுகளைக் கூட அள்ளிகொண்டு வந்தனர்.

அடுத்த கட்டமாக தனுஷ் மற்றும் வெற்றி மாறன் இணைந்து தயாரித்த ‘காக்கா முட்டை’ படத்தின் வெற்றியும் அதற்கு கிடைத்த பாராட்டுகளும் மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பாராட்டுகள் என்றே கூற வேண்டும். 

இந்நிலையில் தனுஷ் , வெற்றி மாறன் இணைந்து அடுத்த படம் கொடுக்க உள்ளனர். இந்நிலையில் படத்திற்கு ஹீரோயின் யார் என்ற கேள்விக்கு பதில் கிடைத்துள்ளன. விஐபி-2 படத்தில் சமந்தாவின் நடிப்பும் நட்பும் பிடித்துப் போக இப்போது இந்த புதிய படத்திலும் சமந்தாவையே நடிக்க வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் சமந்தாவுக்கும் தனுஷின் நடிப்பும், நட்பும் பிடித்துப் போய்விட்டதாம். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close