Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் இளையராஜா!

திடீர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இசையமைப்பாளர் இளையராஜா, சிகிச்சை முடிந்து இன்று வீடு திரும்பினார். 

கடந்த 2013 ஆம் ஆண்டு 73 வயதான இளையராஜாவுக்கு இருதய பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக அவருக்கு பைபாஸ் சர்ஜரி செய்யப்பட்டது. அதன்பிறகு அவர் குணமடைந்து வீடு திரும்பினார். இந்நிலையில், அவருக்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

இளையராஜா, கடந்த வெள்ளிக்கிழமை தனக்காக பிரத்யேக இணையதளம் ஒன்றை தொடங்கி வைத்தார். அன்று இரவு, அவருக்கு திடீரென மூச்சுத்திணறலால் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. உடனடியாக சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவரை தீவிர சிகிச்சைப் பிரிவில் பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதை கண்டறிந்தனர். இதை தொடர்ந்து, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை, ஆஞ்சியோ பிளாஸ்ட் என்ற சிகிச்சை இளையராஜாவுக்கு மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து அவர் தொடர்ந்து மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வந்தார். 

இளையராஜா உடல் நலம் தேறி வருவதாகவும், விரைவில்  அவர் முழு நலத்துடன் வீடு திரும்புவார் என்றும் மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இளையராஜா சிகிச்சை முடிந்து இன்று வீடு திரும்பியதாக இயக்குனர் வெங்கட் பிரபு தனது டிவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பாக அவர், "இசைஞானியின் எல்லா ரசிகர்களுக்கும் ஒரு செய்தி. ராஜா அப்பா நலமுடன் உள்ளார். இது பொதுவான செக் அப்தான். சில பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன. அவர் இன்று  வீடு திரும்பினார்" என பதிவிட்டுள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close