Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நன்றி மறக்காத நாசர்

  நாடகங்கள் திரைப்படங்களாக மாற்றம் பெற்றிருக்கின்றன. இப்போது ஒரு திரைப்படத்தின் மையக்கருவை வைத்துக்கொண்டு குழந்தைகளுக்கான நாடகமொன்றை நடத்தவிருக்கிறார்கள். இசையமைப்பாளர் கார்த்திக்ராஜா கதை எழுதி தயாரிக்கும் அந்த நாடகம் பட்டணத்தில்பூதம்.

இந்த நாடகத்துக்கு வசனம் எழுதுகிறார் பாடலாசிரியர் பா.விஜய். குழந்தைகளுக்கானதாக உருவாகும் இந்த நாடகத்தில் நாசரும் அவருடைய மகன் லுத்புதீன்பாஷாவும் முக்கியவேடங்களில் நடிக்கிறார்கள். இயல்பாகவே நாடகங்கள் மீது பற்றுக்கொண்டவர் நாசர், நாடகங்களே தம்மை உருவாக்கியதாகச் சொல்வார், எனவே, இந்த நாடகத்தில் நடிக்கவேண்டும் என்று கேட்டதும் தயங்காமல் ஒப்புக்கொண்டாராம்.

அவர்களோடு, பாடகர்களான ராகுல் நம்பியார், சின்மயி உள்ளிட்டோரும் நடிக்கவிருக்கிறார்கள். ஒரு திரைப்படத்துக்கான உழைப்பை இந்த நாடகத்துக்குச் செலுத்திக்கொண்டிருப்பதாகச் சொல்லுகிறார்கள். செப்டம்பர் 16 இல் இந்த நாடகம் சென்னையில் நடக்கவிருக்கிறது.

நான்கு நாட்கள் நாடகம் நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்கள். இந்த நாடகம் வெற்றி பெற்றால், இதையே முழுநீளத் திரைப்படமாக எடுக்கும் வாய்ப்பு இருக்கிறது அதோடு இதுபோல் பல நாடகங்கள் உருவாகும் வாய்ப்பு இருக்கிறது.           

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close