Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரஜினி படத்துக்காக இப்போதே தயாராகிவிட்ட ஷங்கர்

  ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருக்கும் கபாலி படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடக்வில்லை, அடுத்தமாதம் 18 ஆம் தேதி தொடங்கவிருப்பதாகச் சொல்கிறார்கள். இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிய எப்படியும் மூன்று அல்லது நான்கு மாதங்கள் ஆகலாம் என்று சொல்லப்படுகிறது.

அதடற்குப் பிறகும் அந்தப்பட வேலைகள் இருக்கின்றன. அதன்பின்னர்தான் ஷங்கர் இயக்கும் படத்தில் ரஜினி கவனம் செலுத்தமுடியும். ஆனால் இப்போதே ஷங்கர் இயக்கும் படத்துக்கான திரைக்கதை இறுதிவடிவத்தை உருவாக்கும் வேலைகள் நடந்துகொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இதற்காக இயக்குநர் ஷங்கர், அவருடைய முக்கியமான உதவியாளர்கள் சிலர் மற்றும் எழுத்தாளர் ஜெயமோகன் ஆகியோர் மகாபலிபுரத்திலுள்ள நட்சத்திரவிடுதியொன்றில், கடந்த சில நாட்களாக தீவிர கலந்துரையாடலில் ஈடுபட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இன்னும் ஒரு வாரம் பத்துநாட்கள் வரை நீடிக்கவிருக்கும் அந்தக் கலந்துரையாடலின் முடிவில் திரைக்கதை இறுதிவடிவம் பெற்றுவிடும் என்று சொல்கிறார்கள். ரஞ்சித் படம் முடிந்து ரஜினி வரும்போது ஷங்கர் குழு பக்காவாகத் தயாராகிவிடும் என்கிறார்கள்.      

 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close