Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கவுண்டமணியைத் துரத்தும் இயக்குநர்கள்: உறுதியானது 49 -ஓ ரிலீஸ்!

  76வயதைத் தொட்ட கவுண்டமணிக்கு இன்னும் மவுசு குறைந்தபாடில்லை. இவருக்குப் பிறகு நடிக்க வந்து காமெடியில் பெரிய ஆளாக மாறியவர்கள் பலரும் இப்போது வாய்ப்புகள் குறைந்து இருக்கும் நிலையில் கவுண்டமணியின் செல்வாக்கு மட்டும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது. 

இவருடைய வசனங்கள், காமெடி இசைகள் கூட இப்போதுப் இருக்கும் இளைஞர்களின் மொபைல் ரிங் டோன்களாக உள்ளன. இந்நிலையில் கவுண்டமணி நடிப்பில் 49 -ஓ படம் முடிந்து ரிலீஸ் தேதியை எதிர்ப்நோக்கி காத்திருக்கிறார்கள். 

இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி சிறப்பாக வெளியாக இருந்த விஜய்யின் புலி தள்ளிப்போனதால் கவுண்டமணியின் 49ஓ படம் இந்த தேதியில் வெளியாக இருக்கிறது. மேலும் இதே நாளில் ரஜினி முருகன் படமும் வெளியாவதும் குறிப்பிடத்தக்கது. 

இது தவிர்த்து ‘எங்களுக்கு வேறு கிளைகள் கிடையாது’ படத்தில் நடித்து வருகிறார். மேலும் சாந்தனு ஹீரோவாக நடித்துள்ள வாய்மை படத்திலும் கவுண்டமணி நடித்துள்ளார். இந்நிலையில் இரண்டு புதிய படக்கம்பெனிகள் கவுண்டமணியை நடிப்பதற்காக துரத்திக் கொண்டிருக்கிறார்களாம். 


சரி கதையைச் சொல்லுங்கள் எனக் கேட்க, அது ஆக்‌ஷன் பாணியிலான போலீஸ் கதையாம், எனக்கு இப்போ 76 வயசு என்னால இனி போலீஸ் ட்ரஸ்லாம் போட்டு நடிக்க முடியுமா,  என கூறி நிராகரித்துள்ளாராம் கவுண்டமணி. வேற நல்ல நடிகரை பார்த்துக்கொள்ளுமாறு கவுண்டமணி சொன்னாலும் அந்த இயக்குநர் விடுவதாக இல்லையாம், கவுண்டமணி எங்கு சென்றாலும் விடாது துரத்தி வருகிறாராம். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close