Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அஜித் பாராட்டு அனிருத் மகிழ்ச்சி

சிவா இயக்கத்தில் அஜித் நடித்துக்கொண்டிருக்கும் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் இருக்கிறது. சென்னையில் சில நாட்களும் அதன்பின் கொல்கத்தாவில் சில நாட்களும் படப்பிடிப்பு நடத்தவேண்டியிருக்கிறதாம்.

அதற்குப்பிறகு படத்தொகுப்பு, குரல்பதிவு ஆகிய வேலைகள் தொடங்கிவிடும். படத்தை நவம்பர் 10 ஆம் தேதி தீபாவளியன்று வெளியிடத்திட்டமிட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதனால் அந்தப்படத்துக்கான எல்லாப்பாடல்களையும் தயார் செய்துவிட்டாராம் இசையமைப்பாளர் அனிருத்.

இருப்பினும் அதில் சின்னச்சின்ன மாற்றங்கள் மட்டும் இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அதேசமயம் முழுமையாக முடிவடைந்த பாடல்களைக் கேட்ட அஜித் மிகவும் உற்சாகமாகிவிட்டதாகச் சொல்லப்படுகிறது.

அதிலும் படத்தில் இடம்பெறவிருக்கும் ஒரு துள்ளல்பாடல் அவருக்கு மிகவும் பிடித்துவிட்டதாம். இதனால் அனிருத்தை மிகவும் பாராட்டினாராம். அதனால் அனிருத் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறாராம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close