Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அனுஷ்கா வரவில்லை நயன்தாரா வருகிறார்!

  அனுஷ்கா, ராணாடகுபதி உட்பட பலர் நடிப்பில் குணசேகர் இயக்கத்தில் இளையராஜா இசையில் தயாராகியிருக்கும் படம் 'ருத்ரமாதேவி'. ஏற்கெனவே சிலமுறை தள்ளிவைக்கப்பட்ட இந்தப்படம் மீண்டும் தள்ளிப்போயிருக்கிறது.

இந்தப்படம் முதலில் ஆகஸ்ட் மாதமே வெளியாகும் என்று சொல்லப்பட்டது. அதன்பின்னர், செப்டம்பர் 4 ஆம் தேதி வெளியாகும் என்று சொன்னார்கள். கடைசியாக செப்டம்பர் 17 ஆம் தேதி படத்தை வெளியிடத் திட்டமிடுகிறோம் என்று சொன்னார்கள்.

இந்தப்படத்தைத் தமிழகத்தில் தேனான்டாள் பிலிம்ஸ் வெளியிடுகிறது. அதேநிறுவனம், இப்போது செப்டம்பர் 17 ஆம் தேதி நயன்தாரா நடித்திருக்கும் 'மாயா' படத்தை வெளியிட முடிவு செய்திருக்கிறதாம். அப்படியானால் நிச்சயம் அந்தத்தேதியில் ருத்ரமாதேவி வராது என்று தெரிகிறது. வெவ்வேறு காரணங்களால் பலமுறை தள்ளிப்போன ருத்ரமாதேவி இந்தமுறை நயன்தாரா படத்தால் தள்ளிப்போயிருக்கிறது என்று சொல்லப்படுகிறது.   

 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close