Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அஜித்துக்குப் பெரியமனசு, நெகிழும் மூத்த நடிகர்

அருண்விஜய் இப்போது புதியபடத்தயாரிப்புநிறுவனம் ஒன்றைத் தொடங்கியிருக்கிறார். இன்சினிமாஸ்எண்டர்டெயின்மெண்ட் என்கிற அந்த நிறுவனத்தின் தொடக்கவிழாவில் பேசிய அருண் விஜய்யின் தந்தை நடிகர்விஜயகுமார், அஜித்தையும் கௌதம்மேனனையும் புகழ்ந்து பேசினார்.

"நான் போகிற இடங்களிலெல்லாம் எல்லாத் திறமைகளும் இருந்தும் அருண்விஜய்க்கு ஒரு ப்ரேக் கிடைக்கவில்லையே என்று எல்லோரும் கேட்பார்கள், அவருடைய திறமைகளை ஓவர்நைட்டில் என்னைஅறிந்தால் படத்தின் மூலம் வெளிக்கொண்டுவந்தார் இயக்குநர்கௌதம்மேனன்.

இன்றைக்கு எல்லோரும் அந்தப்படத்தில் வந்த விக்டர் (என்னைஅறிந்தால் படத்தில் அருண்விஜய்யின் பெயர்) கேரக்டர் பற்றிப் பேசுகிறார்கள். நான் ஐம்பத்தியாறு ஆண்டுகளாக நடித்துக் கொண்டிருக்கிறேன், எம்.ஜி.ஆர், சிவாஜி உட்பட எல்லோரோடும் நடித்திருக்கிறேன்.

என்னுடைய அனுபவத்தில் சொல்கிறேன், என்னைஅறிந்தால் படத்தில் அருண்விஜய் நடிக்கிறார் என்றதும், எனக்காக அவருடைய வேடத்தில் எந்தவிதத்திலும் மாற்றம் வேண்டாம் கதையில் அவருடைய கேரக்டர் எவ்வளவு இருக்கிறதோ அப்படியே இருக்கட்டும் என்று சொல்லியிருக்கிறார் அஜித்.

இப்படிச் சொல்ல பெரியமனசு வேண்டும், அதற்காக அவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் " என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close