Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தயாரிப்பாளராகிறார் இயக்குநர் அட்லி

ராஜாராணி படத்தைத் தொடர்ந்து இப்போது விஜய் படத்தை இயக்கிக்கொண்டிருக்கிறார் அட்லி. இரண்டாவதுபடத்தை இயக்கிக்கொண்டிருக்கும் போதே தயாரிப்பாளர் அவதாரமும் எடுக்கவிருக்கிறாராம். அவர் ஒரு தயாரிப்புநிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறார்.

பாக்ஸ்ஸ்டார் நிறுவனத்துடன் சேர்ந்து முதல்படத்தைத் தயாரிக்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்தப்படத்தை அட்லியிடம் உதவியாளராகப் பணியாற்றிய ஐசக் என்பவர் இயக்கவிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அவரை இயக்குநராக்குவதற்காகவே படத்தயாரிப்பில் இறங்கினேன் என்று அட்லி சொல்லும் வாய்ப்பு இருக்கிறது.

அந்தப்படத்தில் நாயகனாக நடிக்க ஜீவாவை ஒப்பந்தம் செய்திருப்பதாகவும் சொல்கிறார்கள். ஜீவா இப்போது ராம்பிரகாஷ்ராயப்பா இயக்கும் படத்தில் நடிக்கிறார். அதைத் தொடர்ந்து இந்தப்படத்தில் நடிக்கவிருக்கிறார் என்றும் சொல்கிறார்கள்.  

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close