Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விஜய்யின் புலி முன்னோட்டம் செய்த புதிய சாதனை

  சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஸ்ருதி, ஸ்ரீதேவி உட்பட பலர் நடித்த புலி படத்தின் முன்னோட்டம் ஆகஸ்ட் 19 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதை யூடியூபில் இதுவரை அறுபதுஇலட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்த்திருக்கின்றனர். ஒரு மாதம் கூட முழுமையடையாத நிலையில் இவ்வளவு பார்வையாளர்கள் என்பது பெரியசாதனை என்று சொல்லப்படுகிறது.

தமிழ்த்திரைப்படங்களில் இதுவரை அதிக அளவில் பார்க்கப்பட்ட முன்னோட்டம் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் ஐ படமுன்னோட்டம்தான். இது எண்பதுஇலட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையாள்ர்களைக் கொண்டிருக்கிறது. அதற்கு அடுத்தஇடத்தில் இப்போது புலி படம் இடம் இடம்பிடித்திருக்கிறது.

நாற்பத்தியெட்டு இலட்சம் பார்வையார்களுடன் மூன்றாவது இடத்தில் கௌதம் இயக்கத்தில் அஜித் நடித்த என்னைஅறிந்தால் இருக்கிறது. இவற்றில் விக்ரம் மற்றும் அஜித் படங்களில் அவர்களோடு முன்னணிஇயக்குநர்கள் இருக்கிறார்கள் விஜய் படத்தில் அவர் மட்டும்தான் என்று விஜய் ரசிகர்கள் பெருமை பேசுகின்றனர்.  

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close