Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விஜய்யுடன் முதன் முறையாக நான் கடவுள் ராஜேந்திரன் !

ராஜா ராணி பட வெற்றிக்குப் பிறகு அட்லி அடுத்ததாக விஜய்யை வைத்துப் படம் இயக்கிவருகிறார். இப்படத்தில் சமந்தா, எமிஜாக்ஸன், மகேந்திரன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துவருகின்றனர்.

போலீஸ் அதிகாரியாக விஜய் நடித்து வரும் இப்படத்தில் நான் கடவுள் ராஜேந்திரன் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ராஜேந்திரனும் இப்படத்தில் காக்கிச்சட்டை அணியவிருக்கிறாராம். விஜய்யின் போலீஸ் ஓட்டுநராக ராஜேந்திரன் நடிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது.

அட்லியின் ராஜா ராணி படத்தில் சில காட்சிகளில் மட்டும் வந்தாலும் ஸ்கோர் செய்திருக்கும் ராஜேந்திரனுக்கு இப்படத்தில் விஜய்யுடன் பயணிக்கவிருக்கிறார். விஜய்யுடன் நடிக்காத யாரையாவது நடிக்கவைக்க வேண்டும் என்று இயக்குநர் கேட்ட போது, பலரது பெயர்கள் பரிசீலனைக்கு வந்து இறுதியில் ராஜேந்திரனை ஓகே செய்திருக்கிறாராம் அட்லி.

விஜய் - ராஜேந்திரன் கூட்டணியில் வித்தியாசமான காமெடி காட்சிகள் படத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close