Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தயாரிப்பாளரை சந்தோசப்படுத்திய கார்த்திக்சுப்புராஜ்

பீட்சா, ஜிகர்தண்டா ஆகிய படங்களைத் தொடர்ந்து கார்த்திக்சுப்புராஜ் இயக்கியிருக்கும் படம் இறைவி. இந்தப்படத்தில் விஜய்சேதுபதி, பாபிசிம்ஹா, எஸ்.ஜே.சூர்யா, கருணாகரன், அஞ்சலி உட்பட பலர் நடிக்கிறார்கள்.

இந்தப்படம் பற்றிய முதல்அறிவிப்பு பிப்ரவரியில் வந்தது. படப்பிடிப்பு மே மாதம் இருபதாம்தேதி தொடங்கியது. நடுநடுவே இடைவெளிவிட்டு நடத்தப்பட்ட படப்பிடிப்பு முடிவுக்கு வந்திருக்கிறது.

படத்தின் முதல்பார்வை நவம்பர் பத்தாம்தேதி, தீபாவளியன்று வெளியிடப்படும் என்றும், படம் டிசம்பர் மாதம் வெளியிடப்படும் என்றும் அறிவித்துள்ளனர். முதலிரண்டு படங்கள் வெற்றி என்பதோடு கவனிக்கப்படும் இயக்குநராகவும் இருக்கிறார் கார்த்திக்சுப்புராஜ்.

இயக்குநர் திட்டமிட்டபடி படத்தைத் தொடங்கியதோடு திட்டமிட்டபடி முடித்துக்கொடுத்துமிருக்கிறார் என்பதால் அவருடைய தயாரிப்பாளர்கள் சந்தோசமாக இருக்கின்றனராம்.  

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close