Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

காதல் திருமணம் செய்கிறார் அனுஷ்கா?

 சுந்தர் சி. இயக்கத்தில் மாதவன் கதாநாயகனாக நடித்த ‘ரெண்டு’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர், அனுஷ்கா.  விஜய்யுடன் வேட்டைக்காரன், சூர்யாவுடன் சிங்கம், சிம்புவுடன் வானம், விக்ரமுடன் தாண்டவம், ஆர்யாவுடன் இரண்டாம் உலகம், ரஜினியுடன் லிங்கா என்று தமிழின் முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறார். தெலுங்குப் பட உலகிலும் இவர் முன்னணி கதாநாயகியாக இருந்து வருகிறார்.

அவர்  நடித்துள்ள ருத்ரமாதேவி, இஞ்சி இடுப்பழகி ஆகிய படங்கள் விரைவில் வெளியாகவிருக்கின்றன. இந்நிலையில் அவர் திருமணம் செய்துகொள்ளப்போகிறார், அதுவும் காதல்திருமணம் என்று செய்திகள் வருகின்றன.
 
அனுஷ்கா நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த ‘பாகுபலி’ படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் வெளியிடப்பட்டு மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தில் கதாநாயகனாக நடித்தவர், பிரபாஸ்.அனுஷ்காவுக்கும், பிரபாசுக்கும் இடையே ‘பாகுபலி’ படப்பிடிப்பில் காதல் மலர்ந்ததாக தெலுங்கு பட உலகில் கிசுகிசுக்கப்படுகிறது. இவர்களின் காதலை இரண்டு பேரின் பெற்றோர்களும் ஏற்றுக்கொண்டதாகவும் பேசப்படுகிறது.
 
‘பாகுபலி’ படத்தின் இரண்டாம் பாகம் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. இந்தப் படம் திரைக்கு வந்ததும், அனுஷ்கா-பிரபாஸ் திருமணம் நடைபெறும் என்றும் சொல்லப்படுகிறது. 
இது உண்மையா? அல்லது வழக்கம்போல் வதந்தியா? என்பது தெரியவில்லை. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close