Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சாதிப்பாரா அஜித்?

இப்போது வரும் அப்போது வரும் என நினைத்த அஜித்தின் வேதாளம் படத்தின் டீஸர் ஒரு வழியாக அக்டோபர் 8ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு வெளியாக இருக்கிறது. இந்நிலையில் தென்னிந்திய அளவில் இதுவரை அதிகம் பார்க்கப்பட்ட டிரெய்லராக விக்ரமின் ஐ படமும் இரண்டாம் இடத்தில் விஜய்யின் புலி படமும் இடம் பிடித்துள்ளது.

இந்நிலையில் அஜித்தின் வேதாளம் என்னனென்ன சாதனைகளை படைக்கவிருக்கிறது என ஆவலாக காத்திருக்கிறார்கள் அவரது ரசிகர்கள். மேலும் இதற்கு முன்பு இந்தியா அளவில் அதிகம் லைக்குகளை பெற்ற டீஸராக சல்மான்கானின் கிக் படம் இருந்துவந்தது. கிக் படத்தின் டீசருக்கு 1,02144 லைக்குகள் இருந்தன.

அந்த சாதனையை விஜய்யின் புலி படத்தின் டீஸர் 1,11, 709 லைக்குகளுடன் முறியடித்தது. இந்நிலையில் இந்தச் சாதனையை வேதாளம் படம் முறியடிக்குமா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. ஒரு பக்கம் டீஸரைக் காண சினிமா ரசிகர்கள் எனில் மறுபக்கம் டீஸரை எப்படியெல்லாம் சாதனைப் படைக்கச் செய்யலாம் என அஜித் ரசிகர்களும் என காத்திருக்கின்றனர். இன்னும் சில மணிநேரங்கள் தான் உள்ளன. அதற்குள் ரசிகர்கள் ட்விட்டரில்  #VedalamTeaserStormOntheWay  என ட்ரெண்டை உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close