Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மீண்டும் படம் இயக்கும் அஜித்தின் தயாரிப்பாளர்

 அஜித்தின் வேதாளம் படத்தைத் தயாரித்துக்கொண்டிருக்கும் ஏ.எம்.ரத்னம் மகன் ஜோதிகிருஷ்ணா. இவர் 2003 ஆம் ஆண்டு த்ரிஷா, ஸ்ரேயா ஆகியோர் நடித்த எனக்கு20 உனக்கு18 படத்தை தமிழ்,தெலுங்கு ஆகிய இரண்டுமொழிகளில் இயக்கினார்.

அதன்பின் 2006 இல் இலியானா தமன்னா நடித்த கேடி என்கிற படத்தை இயக்கினார். அதற்கடுத்து இவரே கதாநாயகனாக நடித்து ஊலலலா என்கிற படத்தை இயக்கினார். இப்படம் 2012 இல் வெளியானது.  இவை எல்லாமே பேசப்பட்ட அளவு வசூல் தரவில்லை என்று சொல்லப்பட்டது. அதனால் படம் இயக்குவதை விட்டுவிட்டு, ஏ.எம்.ரத்னம் தயாரிக்கும் படங்களில் நிர்வாகத்தைப் பார்த்துக்கொள்கிறார் என்று சொல்லப்பட்டது.

இப்போது அவர்கள் தயாரிக்கும் வேதாளம் படத்தின் தயாரிப்பு என்று ஜோதிகிருஷ்ணாவின் மனைவி ஐஸ்வர்யா பெயர்தான் இருக்கிறது. மீண்டும் படம் இயக்கவேண்டும் என்று ஜோதிகிருஷ்ணா மிகவும் விரும்பியதாகச் சொல்லப்படுகிறது.

அதனால் அவர்கள் தயாரிப்பிலேயே இப்போது அவர் மீண்டும் ஒருபடத்தை இயக்கவிருக்கிறாராம். ஆனால் படத்தைத் தமிழில் இயக்காமல் தெலுங்கில் எடுக்கவிருக்கிறாராம். கோபிசந்த் கதாநாயகனாக நடிக்கவிருக்கும் அந்தப்படம் விரைவில் தொடங்கவிருக்கிறதாம்.    

 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close