Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பாபிசிம்ஹா ரேஷ்மி மேனன் திருமணம் உறுதியா?

பாபிசிம்ஹா, ரேஷ்மி மேனன் நடிப்பில் உருவாகிவரும் படம் உறுமீன். இப்படத்தை சக்திவேல் பெருமாள் சாமி இயக்கியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பின் போது பாபிசிம்ஹாவுக்கும், ரேஷ்மி மேனனுக்கும் காதல் மலர்ந்ததாகவும், திருப்பதியில் ரகசிய திருமணம் செய்து கொள்ளவிருப்பதாகவும் முன்னர் தகவல்கள் வெளியாகின.

அந்த சமயத்தில் ரேஷ்மி மேனனிடம் கேட்டதற்கு,“ அதுக்கு இப்போதைக்கு எந்தப் பதிலும் இல்லை. இப்போது  எங்களுக்குப் படம் தான் முக்கியம். இதப் பத்தி பேசுறதே வேணாம்னு நினைக்கிறேன் என்று கூறினார்.  தொடர்ந்து பாபிசிம்ஹாவிடன் கேட்டதற்கு, “ அப்படியெல்லாம் இல்லை, படம் தான் முக்கியம் என்று மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் வரும் நவம்பர் 8ம் தேதி பாபிசிம்ஹா, ரேஷ்மி மேனன் இருவருக்கும் சென்னையில் நிச்சயதார்த்தம் நடைபெறவிருக்கிறது. நெருக்கமான நண்பர்களும் உறவினர்களும் மட்டுமே கலந்துகொள்ளவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் திருமண தேதியை அறிவிக்க திட்டமிட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

காமெடி நடிகர் கருணாகரன் மற்றும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இருவரும்  ட்விட்டரில் பாபிசிம்ஹாவிற்கும் ரேஷ்மி மேனனுக்கும் வாழ்த்துகளை தெரிவித்ததன் மூலம் அடுத்த வருடம் நிச்சயம் திருமணம் என்பது உறுதியாகியிருக்கிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close