Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கமல் பிறந்தநாளையொட்டி இன்று முழுவதும் நிகழ்ச்சிகள், கமலும் பங்கேற்கிறார்

கமல் பிறந்தநாளையொட்டி அவருடைய நற்பணி இயக்கத்தினர், நலத்திட்ட உதவிகள், இலக்கியநிகழ்ச்சி மற்றும் நிதியுதவி வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்திருக்கின்றனர். அந்நிகழ்ச்சிகள் பற்றிய விவரங்கள் அடங்கிய செய்திக்குறிப்பு,

அகில இந்திய கமல்ஹாசன் நற்பணி இயக்கம் சார்பில்  கமல்ஹாசன் பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு நலத்திட்ட உதவி வழங்குதல் மற்றும் மருத்துவ முகாம்,  இலக்கிய விழா ஆகியவை நவம்பர் 7(7-11-2015) அன்று நடைபெற உள்ளது.

காலை 8 மணிக்கு கீழ்ப்பாக்கம் கார்டன் பகுதியில் உள்ள பாலவிஹாகர் மனநலம் குன்றிய காப்பகத்தினர்களுக்கு காலை உணவும் மற்றும் இலவச மருந்துப் பொருட்களும் வழங்கப் படுகிறது.

காலை 9 மணிக்கு அகில இந்திய கமல்ஹாசன் நற்பணி இயக்கம் மற்றும் செட்டிநாடு சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவமனையும் இணைந்து இருதய அறுவை சிகிச்சைக்கான இலவச சிறப்பு மருத்துவ முகாம் அரும்பாக்கம் காவல் சிறார் மன்ற வளாகம், பி.36.எம்.எம்.டி.ஏ  காலனி, சென்னையில்  நடைபெறுகிறது.

மதியம் 3 மணி  பிறந்த நாள் மற்றும் 37-வது நற்பணி இயக்க ஆண்டு விழா சென்னை அண்ணா கலையரங்கில் (சுவாமி சிவானந்தா சாலை, தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிலையம் எதிரில் ) நடைபெறுகிறது. விழாவிற்கு கவிஞர் புவியரசு தலைமை வகிக்கிறார், நடிகர் சங்கத் தலைவர் நாசர் மற்றும் எழுத்தாளர் சுகா ஆகியோர் வாழ்த்திப் பேசுகிறார்கள்.

2014-2015- க்கான அன்னை இராஜலட்சுமி நினைவு இலக்கிய விருது மற்றும் தியாகி சீனிவாசன் கல்வி அறக்கட்டளை சார்பில் பரமக்குடி மேல்நிலைப் பள்ளிக்கு கட்டிட நிதி, சிறந்த மாவட்டங்களுக்கான சிறப்பு விருதுகள் வழங்கி நற்பணி இயக்க தலைவர் கமல்ஹாசன் அவர்கள் விழா சிறப்புரை நிகழ்த்துகிறார்கள். முன்னதாக அகில இந்தியப் பொறுப்பாளர் ஆர்.தங்கவேலு அனைவரையும் வரவேற்கிறார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close