Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நலமாக இருக்கிறார் அஜித்!

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆரம்பம் படத்தின் படப்பிடிப்பின் போது கார் சேசிங் மற்றும் சண்டைக் காட்சியில் நடிக்கும் போது அஜித்தின் வலது முழங்காலிலும் தோள்பட்டையிலும் பலத்த காயம் ஏற்பட்டது.

அஜித்துக்கு அப்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தாலும் அடிக்கடி வலி ஏற்பட்டிருக்கிறது. இதனால் மருத்துவரிடம் ஆலோசனைக்கு சென்றிருக்கிறார் அஜித். அப்போது ஸ்கேன் செய்து பார்த்ததில் உடனடியாக அறுவை சிகிச்சை செய்துகொண்டால் குணமடைய முடியும் என்று மருத்துவர்கள் கூறியதாக சொல்லப்படுகிறது.

அஜித் அடுத்தடுத்த படங்களில் பிஸியாக இருந்ததால் உடனடியாக அபரேஷன் செய்துகொள்ளாமல் தள்ளிக்கொண்டே போனது. இந்நிலையில் சிவா இயக்கத்தில் வேதாளம் படப்பிடிப்பின் கடைசி நாள் ஷூட்டிங்கில், முன்னர் விபத்து ஏற்பட்ட இடத்திலேயே மீண்டும் அடிபட்டுள்ளது. இதைத் தொடர்ந்து உடனடியாக ஆபரேஷன் செய்யவேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தினார்கள். வருகிற 24ம் தேதி ஆபரேஷன் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது.

அதீத வலியின் காரணமாக நேற்று காலை சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் மூட்டுவலி அறுவைசிகிச்சை  பிரிவில் அஜித் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து மாலை அறுவைசிகிச்சை தொடங்கி ஆறுமணிநேரம் நடந்தது.

தற்பொழுது அஜித் நலமுடம் இருக்கிறார். மேலும் ஓரிரு தினங்களில் வீடு திரும்புவார் என்றும் மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close