Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஸ்ரீதேவியின் கணவரை மன்னிக்கமாட்டேன்! ராம்கோபால்வர்மா அடுத்த சர்ச்சை!

சர்ச்சை நாயகன், பிரபல இந்திப்பட இயக்குநர் ராம்கோபல் வர்மா “கன்ஸ் அன்ட் தைஸ்” என்ற தலைப்பில் புதிய சுயசரிதையை எழுதிஉள்ளார், அந்த சுயசரிதையில் நடிகை ஸ்ரீதேவியை அழகு தேவதை என்று குறிப்பிட்டுள்ளார்.

அந்த சுயசரிதையில், “ ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரை எக்காரணத்திற்காகவும் மன்னிக்கவே மாட்டேன். ஏனெனில், போனிகபூரின் வீட்டில் ஸ்ரீதேவி டீ தயாரித்துக்கொண்டிருப்பதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. அதனால் அவரை மன்னிக்க மாட்டேன். வானிலிருந்து இறங்கி வந்த தேவதையை சமையலறையில் வேலை செய்ய விட்டுவிட்டார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

சுயசரிதையில் ஸ்ரீதேவியைப் பற்றி குறிப்பிட்டுள்ளவற்றை “ஒர் காதல் கடிதம்” என்று கூறியுள்ளார். மேலும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவர் மீது ஈர்ப்பு வரலாம். அந்த உணர்வை நீங்கள் அனுபவிக்கலாம். இவையெல்லாம் ஒரு போதை போன்றது தான்.

-என்று ஸ்ரீதேவி பற்றியும், அவருக்கும் ஸ்ரீதேவிக்குமான அன்பு பற்றியும் அக்காதல் கடிதத்தில் எழுதி நிறைத்துள்ளார் ராம்கோபால்வர்மா.

இரண்டு இந்திப் படம் மற்றும் இரண்டு தெலுங்கு படம் என  ராம்கோபால்வர்மா இயக்கத்தில் நான்கு படங்களில் ஸ்ரீதேவி நாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close