Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரஜினிமுருகன் படத்தின் அடுத்தரிலீஸ் தேதி?

இயக்குநர் லிங்குசாமியின் தயாரிப்பில் பொன்ராம் இயக்கி சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் ரஜினிமுருகன், பல தடைகளைக் கடந்து டிசம்பர் நான்காம்தேதி வெளியாவதாகச் சொல்லப்பட்டது.

எதிர்பாராதவிதமாக வந்த மழை பட ரிலீஸைத் தடுத்துவிட்டது. மழை காரணமாகப் படத்தைத் தள்ளிவைப்பதாகச் சொன்னார்கள். மழை ஒரு காரணம் என்றாலும் தயாரிப்புநிறுவனத்தின் சிக்கல்கள் முழுமையாகத் தீராததும் ஒரு காரணம் என்றும் சொல்லப்படுகிறது.

சிக்கல்களைச் சரி செய்துவிட்டாலும் அடுத்தடுத்து சில சிக்கலக்ள வந்துவிட்டன என்றும் அவற்றைச் சரி செய்யும் முயற்சியில் தயாரிப்புநிறுவனம் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

ரஜினிமுருகன் பட சிக்கல்கள் விரைவில் சரிசெய்யப்பட்டுவிடும் என்றும் அடுத்த பொங்கல்நாளில் படத்தை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

ஏற்கெனவே பொங்கலன்று பாலாவின் தாரைதப்பட்டை, விஷாலின் கதகளி, ஜெயம்ரவியின் மிருதன், சுந்தர்சியின் அரண்மனை2 ஆகிய படங்கள் வெளியாகவதாகச் சொல்லப்பட்டிருக்கும் நிலையில் இப்போது இந்தப்படத்தையும் பொங்கலன்று வெளியிடுவதாகச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close