Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அடக்கடவுளே....விஜய், அஜித் ரசிகர்கள் அட்ராசிட்டி இப்படியுமா போகும்?

தெறி படம் குறித்த இடைவேளைக் காட்சி இதுதான் என ஒரு வாட்ஸப் மெஸேஜ் தற்போது விஜய் அஜித், ரசிகர்கள் மத்தியில் வைரலாகப் பரவி வருகிறது.

அது தான் இது... சமீபத்தில் தான் நடிகர் 'விஜய்' நடிக்க அட்லி இயக்கும் "தெறி" படத்தின் இடைவேளைக் காட்சி சென்னை சத்யம் சினிமாஸில் படமாக்கபட்டது!! அதில் வரும் ஒரு காட்சியில் விஜய் மற்றும் சமந்தா 'வேதாளம்' படம் பார்ப்பது போலவும் அப்போது விஜய்க்கு ஒரு மொபைல் அழைப்பு வருகிறது!! மறுமுனையில் வில்லன் விஜய்யை மிரட்ட! விஜய் வெளியே கார் பார்க்கிங்கில் 'அஜித்'ன் கட்-அவுட் முன்பு நின்று வில்லனுக்கு சவால் விடும் காட்சி ஒன்று படமாக்கப்பட்டதாம்.

அந்தக் காட்சியில் விஜய்க்கும்-வில்லனுக்கும் நடக்கும் உரையாடல் வில்லன், ”தமிழ்நாடு போலீஸ் டிபார்ட்மெண்ட்ல இருக்க ஒருத்தனாலும் நான் இருக்குர இடத்த கண்டு பிடிக்க முடியாது!! தேவையில்லாம என்னோட கான்சைன்மெண்ட்ல நீ தலையிட்ட.. அடுத்த 24 ஹவர்ஸ்ல உங்க டிபார்ட்மெண்ட்ல இருக்குர ஒவ்வொருத்தரையும் ஒன் பை ஒன்னா 'தெறிக்கவிடரேன்' பாருவிஜய் 'அஜித்'ன் கட்-அவுட்டை பார்த்து வில்லனிடம்!! .#பங்கு தெறிக்கவிடலாமா என விஜய் அடுத்த டயலாக்கில் கேட்க்கிறாராம்.

இவங்க கிரியேட்டிவிட்டிக்கு அளவே இல்லாம போயிகிட்டு இருக்கு. முதலில் எல்லாம் அஜித் , விஜய் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள், அதைச் செய்தார்கள், இதைச் செய்தார்கள் என்றுதான் சமூக வலைகளை அலறடித்தனர் இப்போது தலதளபதி படங்களுக்கு காட்சிகளை யோசித்து சுற்றலில் விட ஆரம்பித்து விட்டார்கள். எனினும் சீன் செம மாஸாகத்தான் இருக்கிறது. ஆனால் நம்பத் தகுந்த வட்டாரங்களில் விசாரித்தால் சத்யம் தியேட்டரில் நாங்கள் படப்பிடிப்பே நடத்தவில்லையே என்கிறார்கள் ஆச்சர்யமாக.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close